ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். 

இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்கிற அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும், இந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மக்களவையிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் இத்தகைய முடிவுகளை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த போதிலும் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவுகள் எதன் அடிப்படையில் நீக்கப்பட்டது என்பதையும் அதில் தெளிபடுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த அரசாணை நடைமுறைக்கு வந்துள்ளது.