Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்கர் ஹீரோஸ் பொம்மன், பெள்ளியை சந்திக்க வருகிறார் பிரதமர் மோடி !!

பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை நேரில் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

pm narendra modi visits the elephant whisperers fame bomman billie
Author
First Published Apr 1, 2023, 9:46 AM IST

தாயை பிரிந்து தவித்த இரு குட்டிகளை முதுமலை காட்டில் வைத்து தம்பதி வளர்த்து வந்தனர்.

அந்த குட்டிகளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வந்த நிலையில் அதை இரு ஆண்டுகளாக அவர்களுடன் இருந்து தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்தை இயக்கப்பட்டுள்ளது. தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவின் கதை.

pm narendra modi visits the elephant whisperers fame bomman billie

இந்த யானையை பொம்மா மற்றும் பெல்லி என்ற தம்பதியினர் பராமரித்து வந்தார்கள். இந்த ஆவணபடத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப்பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச்சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப்படம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது. படக்குழுவினரை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாயும் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு 1 கோடி ரூபாயும் ஊக்கத்தொகை கொடுத்தார். 

இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

pm narendra modi visits the elephant whisperers fame bomman billie

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வேஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 50 ஆண்டு புலிகள் பாதுகாப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பந்திப்பூர், முதுமலை, வயநாடு சரணாலயங்களைப் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அதில் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ரியல் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதிகளைச் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

Follow Us:
Download App:
  • android
  • ios