மோடி அனைவரையும் முட்டாள் ஆக்குகிறார் என்று சொல்வார்கள்: வந்தே பாரத் விழாவில் பிரதமர் பேச்சு
11வது வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பேசிய மோடி, காங்கிரஸ் நண்பர்கள் மோடி எல்லோரையும் முட்டாள் ஆக்கிவிட்டார் என்று அறிக்கை விடத்தான் போகிறார்கள் என்று கிண்டல் அடித்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் இருந்து தலைநகர் டெல்லி வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று (சனிக்கிழமை) கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
போபால் - டெல்லி இடையே இயக்கப்படும் இந்த வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கும் 11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்த ரெயில் போபால் நகரில் உள்ள ராணி கமல்பதி ரயில் நிலையத்தில் இருந்து 708 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து டெல்லியின் ஹஸ்ரத் நிசாமுதின் ரயில் நிலையத்தை அடையும்.
இந்த வந்தே பாரத் எஸ்பிரஸ் ரயிலின் மூலம் போபால் - டெல்லி இடையேயான பயண நேரம் 7 மணி நேரம் 45 நிமிடங்களாக்க் குறைக்கப்படுகிறது. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே சொல்கிறது.
வெப்சைட் மூலம் 67 கோடி பேரின் தகவல்களைத் திருடி விற்ற சைபர் திருடன் கைது
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், "இன்று ஏப்ரல் 1ஆம் தேதி. நமது காங்கிரஸ் நண்பர்கள் நிச்சயம் மோடி அனைவரையும் முட்டாள் (April Fool) ஆக்குவதாக அறிக்கை விடப்போகிறார்கள். ஆனால், இந்த ரயில் சேவை ஏப்ரல் 1ஆம் தேதியில்தான் தொடங்கப்படுகிறது. இதுதான் நமது திறமை மற்றும் நம்பிக்கையின் அடையாளம்" என்றார்.
காங்கிரஸ் கட்சியைக் கிண்டல் செய்த பிரதமர் மோடி, "முந்தைய அரசாங்கங்கள் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதில் மூழ்கியிருந்தன. அவை மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. ஒரு குடும்பத்த்தின் நலனையே முக்கியமாகக் கருதினார்கள். அவர்களால் பலியானது இந்திய ரயில்வேதான்” என்றார்.
2030க்குள் மனிதர்களின் மரணத்தைத் தடுக்கும் நானோ ரோபா! முன்னாள் கூகுள் விஞ்ஞானி குர்ஸ்வேல் தகவல்
2014ஆம் ஆண்டுக்கு முன்பு இந்திய ரயில்வே அவல நிலையில் இருந்ததாகச் சொன்ன மோடி, "தீர்வு கிடைக்காது என்று தெரிந்ததும் பயணிகள் குறை சொல்வதைக்கூட நிறுத்திவிட்டார்கள்" என்றார். கடந்த 9 ஆண்டுகளில், ரயில்வே பட்ஜெட் உயர்ந்துள்ளது எனவும் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்தியப் பிரதேசம் ₹13,000 கோடிக்கு மேல் பெற்றுள்ளது எனவும் பிரதமர் மோடி கூறினார்.
சுமார் 900 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தன் பேச்சின்போது சொன்னார். பாரத ரயில்வே என்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற 300 பள்ளி மாணவ மாணவியருடனுடம் பிரதமர் மோடி உரையாடினார்.
காக்கி டவுசர், கையில் லத்தி... இவர்கள்தான் கௌரவர்கள்! மீண்டும் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு!