வெப்சைட் மூலம் 67 கோடி பேரின் தகவல்களைத் திருடி விற்ற சைபர் திருடன் கைது

வெப்சைட் மூலம் 67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி விற்று லாபம் சம்பாதித்து வந்த சைபர் திருடனை தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.

Cyberabad cops arrest man for holding, selling data of 67 cr individuals

நாடு முழுவதும் உள்ள சுமார் 67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்பனை செய்த சைபர் க்ரைம் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

விநாயக் என்பவர் ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் உள்ள 'இன்ஸ்பயர் வெப்ஸ்' (Inspire Webz) என்ற இணையதளம் மூலம் கோடிக்கணக்கான தனிநபர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடியுள்ளார். அதுமட்டுமின்றி திருடிய அந்தத் தகவல்களை கிளவுட் டிரைவ் மூலம் பலருக்கு விற்பனை செய்துவந்துள்ளார்.

இந்தியாவின் 8 மெட்ரோ நகரங்கள் உள்பட 24 மாநிலங்களில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அவற்றை விற்பனையும் செய்திருக்கிறார். இவரை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையினர் இவரைக் கைது செய்துள்ளனர்.

காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 66.9 கோடி தனிபர்கள் மற்றும் 104 பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் குறித்த தனிப்பட்ட, ரகசியத் தகவல்களை விற்று பணம் ஈடி வந்திருக்கிறார்.

அரசு ஊழியர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பான் கார்டு வைத்துள்ளோர், 9, முதல் 12 வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்கள், நீட் மாணவர்கள், டெல்லி மின்வாரிய வாடிக்கையாளர்கள், டி-மார்ட் கணக்கு வைத்துள்ளோர், கோடீஸ்வரர்கள், இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள், கிரெடிட் டெபிட் கார்டு வைத்துள்ளோர் என பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

விநாயக் பகத்வாஜை கைது செய்த செய்துள்ள தெலுங்கானா காவல்துறை அவரிடம் விசாரணையைத் தொடர்கின்றனர். அவரிடம் இருந்த 2 மொபைல் போன்கள், 2 லேப்டாப்கள், அவர் திருடிய தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த கருவிகள் போன்றவை காவல்துனையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios