காக்கி டவுசர், கையில் லத்தி... இவர்கள்தான் கௌரவர்கள்! மீண்டும் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு!
ஆர்எஸ்எஸ் அமைப்பினரை 21ஆம் நூற்றாண்டின் கௌரவர்கள் என்று கூறியதற்காக ராகுல் காந்தி மீது புதிய அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் எம்பியும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை இந்த ஆண்டு ஜனவரியில் அவர் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக அவர் கருத்து தெரிவித்தார் என்று சொல்லப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கமல் பதவுரியாவின் புகாரின் பேரில் வழக்கறிஞர் அருண் பதாரியா ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.
எரிமலையின் உச்சியில் ஒரு மாதம்! உலக சாதனை படைக்கும் மெக்ஸிகோ இளம்பெண்!
2023 ஜனவரி 9ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவில் பாரத் ஜோடோ யாத்ராவிற்குப் பிறகு நடந்த தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் "21ஆம் நூற்றாண்டின் கௌரவர்கள்" என்று கூறினார்.
"கௌரவர்கள் யார்? நான் முதலில் உங்களுக்கு 21ஆம் நூற்றாண்டின் கௌரவர்களைப் பற்றிச் சொல்கிறேன். அவர்கள் காக்கி அரைக்கால்சட்டை அணிந்து, கையில் லத்தி ஏந்தி, ஷாகாக்களையும் வைத்திருக்கிறார்கள்; இந்தியாவின் 2-3 பில்லியனர்கள் அந்த கௌரவர்களுடன் நிற்கிறார்கள்" என்று ராகுல் குறிப்பிட்டார்.
2030க்குள் மனிதர்களின் மரணத்தைத் தடுக்கும் நானோ ரோபா! முன்னாள் கூகுள் விஞ்ஞானி குர்ஸ்வேல் தகவல்
இந்தப் பேச்சை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சார்பில் தொடப்பட்டுள்ள வழக்கு ஏப்ரல் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த மாதம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2019ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "எல்லா திருடர்களுக்கும் மோடியின் என்ற பெயர் வந்தது எப்படி" என்று பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த் தீர்ப்பை வழங்கியது.
இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த வைக்கம் போராட்டம்: முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு