இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த வைக்கம் போராட்டம்: முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு
வைக்கம் போராட்டம் கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும், இந்தியா முழுவதிலும் சமூக நீதி போராட்டத்துக்கு வழிகாட்டியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
கேரள அரசு சார்பில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா சென்றார்.
வள்ளிக்காவலாவில் உள்ள வைக்கம் சத்தியாகிரகத் தலைவர்கள் நினைவிடத்திலும் பின்னர் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது, "உடல்கள் வேறு வேறாக இருந்தாலும், எனக்கும் பினராயி விஜயன் அவர்களுக்கும் சிந்தனை ஒன்றுதான். தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையிலும், இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஆர்வத்துடன் வந்திருக்கிறேன்" என்று கூறினார்.
சிங்கப் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அஞ்சல் சேமிப்புத் திட்ட வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம்
தொடர்ந்து பேசிய முதல்வர், "வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டமாக உள்ளது; இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த போராட்டமாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மஹர் போராட்டத்தை நடத்துவதற்கு வைக்கம் போராட்டமே தூண்டுகோலாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக்காட்டினார். சுயமரியாதை மற்றும் சமூகநீதி போராட்டத்தின் தொடக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதள்குப் பெருமைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல. இந்தியாவுக்கு மட்டுமான தலைவர் அல்ல. உலகம் முழுமைக்குமான தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள். அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும் அனைத்து நாட்டுக்கும் - அனைத்து மக்களுக்கும் பொதுவான சிந்தனைகள்! எனக்கு எந்தப் பற்றும் இல்லை, மனிதப் பற்று மட்டுமே உண்டு என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு ஓராண்டு கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் பகுதியாக, ஆய்வாளர் பழ. அதியமான் அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ என்ற நூலின் மலையாள மொழிபெயர்ப்பு (വൈക്കം സത്യാഗ്രഹം) விழாவில் வெளியிடப்பட்டது. கேரளாவின் முன்னணி பதிப்பகமான டி.சி. புக்ஸ் (DC Books) இந்த நூலை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்திற்கு உட்பட்டிருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற இடத்தில் சோமநாதர் கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடக்கக் கூடாது என்று ஒடுக்குமுறை இருந்தது. பல ஆண்டுகளாக இருந்த இந்தக் கொடுமையை எதிர்த்து 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் முதலில் போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்று கலந்துகொண்ட பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர், தமிழகத்திலும் பல இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றதற்கு வித்திட்ட போராட்டமாக இந்த வைக்கம் போராட்டம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
காக்கி டவுசர், கையில் லத்தி... இவர்கள்தான் கௌரவர்கள்! மீண்டும் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு!