நித்யானந்தா ஈகுவடாரில் எந்த நாட்டையும் உருவாக்கவில்லை என இங்கிலாந்து நாட்டுக்கான ஈகுவடார் தூதர் ஜெய்ம் மார்ச்சன் ரோமிரோ மறுத்துள்ளார்.

ஈகுவடாரில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய எந்த வெளிநாட்டுக்காரரும் எந்த நிலமும் வாங்கவில்லை. நித்தியானந்தா 2018ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதியன்று ஈகுவடாரின் குவாயாகில் சுற்றுலாப் பயணியாக நுழைந்து பின்னர் சர்வதேச பாதுகாப்பு அந்தஸ்த்துக்கு விண்ணப்பித்தார். அவருடைய கோரிக்கையை பரிசீலித்து 2018 அக்டோபர் 19ஆம் தேதி தற்காலிக விசா வழங்கப்பட்டது.


 
பின்னர் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்த நித்தியானந்தாவின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்த ஈகுவடார் தேசிய ஆணையம் அதனை நிராகரித்தது. எனினும் தனக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஈகுடவார் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். இதனிடையே 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நித்தியானந்தா ஈகுவாடர் விட்டு வெளியேறினார். அவர் ஹைதி நாட்டுக்குச் சென்றிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து நித்யானந்தா எங்கே என என குஜராத் போலீஸார் தவித்து வர, அவர், பெங்களூருவில் பிடதி ஆசிரமத்தில் ரகசிய அமைத்து பதுங்கி இருக்கலாம் என நித்தியின் முன்னாள் சிடர் கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜி நித்தியானந்தா. 2009 ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு தனது தாயுடன் சென்று கடந்த 10 ஆண்டுகளாக நித்தியானந்தாவுடன் இருந்தவர். ஆரம்பத்தில் பணம் மற்றும் தங்கத்தை இரு மடங்கு மூன்று மடங்கு ஆக்குவதாக கூறிய நித்தியை நம்பி தங்கள் குடும்ப சொத்துக்களை எல்லாம் விற்று லட்சகணக்கில் கொடுத்துள்ளார் விஜி நித்யானந்தா.

இருபாலின சேர்க்கையாளரான நித்தியானந்தா, தன்னை பார்வதி என்றும் பரமசிவன் எனவும் கூறி அழகான பெண்களையும், ஆண்களையும் தனது பிடிக்குள் வைத்திருப்பதாகவும், கடந்த 2015 ஆம் ஆண்டு நித்தியிடம் மிகவும் நெருங்கி பழகிய தன்னையும், தன்னுடைய நண்பர்களையும் அழைத்து பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டதாகவும், இதனால் நித்தியின் உருவத்தை தனது உடல் முழுவதும் பச்சை குத்தி கொண்டதாகவும் கூறி  தெரிவிக்கிறார் விஜி.

இதையும் படியுங்கள்:- மு.க.ஸ்டாலினுக்கு ஒரு தீவை வாங்கித் தரப்போகிறேன்... புயலைக் கிளப்பும் நித்யானந்தா..!

நித்தியின் அத்தனை ஆசிரமங்களுக்கும் ராஜமாதாவாக இருப்பவர் நடிகை ரஞ்சிதா. டன் கணக்கில் அவர் வசம் உள்ள தங்க நகைகளுடன் ராணி போல உள்ள ரஞ்சிதாவின் கண் அசைவின்றி அங்கு எந்த ஒரு செயலும் நடக்காதாம். முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கவனித்துக் கொள்வதும் ரஞிதாவின் வழக்கமாம். தன்னை எல்லோரும் அக்கா என்று அழைக்க வேண்டும் என மற்றவர்களுக்கு ரஞ்சிதா கட்டளை போட்டுள்ளாராம் ரஞ்சிதா.

நித்தியானந்தா கிரீன் மேட் பின்னணியில் பெங்களூரு பிடதி ஆசிரமத்தின் பூமிக்குள் உள்ள பாதாள அறையில் மறைந்து இருந்து கொண்டு வெளிநாட்டில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வீடியோ வெளியிடுகிறார். ஆகையால் ரஞ்சிதாவை பிடித்து காவல்துறையினர் முழுமையாக விசாரித்தால் நிதியானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம் என்கிறார் விஜி. ஆக நித்தியின் லீலைகள் இருபாலரிடமும் இச்சையை தீர்த்துக் கொள்வதும் அதிர வைத்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஆண் பாலும் அல்ல. பெண் பாலும் அல்ல. வித்தியாசமான 11 பாலினங்கள் அடங்கிய ஒரு பாலினம் என அவர் தெரிவித்து இருந்தார். இன்னும் எத்தனை லீலைகளும், சுவரஸ்யத் தகவல்களும் நித்தி விவவகாரத்தில் வெளியே கிளம்பப்போகிறதோ..!