இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ல வீடியோவில், ‘’வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருவார். மீனாட்சி நினைத்தால் இது நடக்கும். அப்படி நடக்கும் நிலையில் , கைலாஷ் அருகில் அவருக்கு ஒரு தீவை அளிக்க உள்ளேன்.  சிவபெருமான் இதற்கு இசைவு தெரிவித்து, காலபைரவர் அதற்கு அனுமதி தருவதுடன் மீனாட்சியின் அருளும் தேவை.

2021-ஆம் ஆண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், மு.க. ஸ்டாலின் நிச்சயமாக முதலமைச்சராக வருவார் என நான் நம்புகிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார். ஆன்மீகம், கர்நாடக போலிசார் என பரபரப்பை ஏற்படுத்தி வந்த நித்தியானந்தா, தற்போது, தமிழக அரசியலிலும் பெரும்புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.