நிலவில் கால் பதித்ததும் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்தித்த மலையாளி! இந்தக் குட்டிக் கதை உங்களுக்குத் தெரியுமா?

நிலவில் கால் பதித்ததும் நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்தித்து ஒரு மலையாளி என்று சொல்லும் ஒரு சுவாரஸ்மான கதை இன்றுவரை பிரபலமாக இருக்கிறது.

Neil Armstrong met Malayali person on Moon? Here's what the classic joke means

ஜூலை 1969 இல் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் மேற்பரப்பில் இறங்கி 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது முதல் இன்றுவரை கேரளாவில் ஒரு நகைச்சுவையை கதை உலவி வருகிறது. சந்திரனில் கால் பதித்தவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு மலையாளியை சந்தித்தார் என்று சொல்கிறது அந்த சுவாரஸ்மான குட்டிக் கதை.

இந்த நகைச்சுவை குட்டிக்கதை உருவானது எப்படி? இதன் அர்த்தம் என்ன? கேரளாவைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகள் உள்பட பல நாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கிறார்கள் அல்லது பணி நிமித்தமாக அங்கு தங்கியிருக்கிறார்கள். இதனால்தான், 'எங்கு போனாலும் ஒரு மலையாளியைப் பார்க்கலாம்' என்ற பழமொழி கேரளத்தில் பிரபலம். இதிலிருந்து உருவானதுதான், ஆம்ஸ்டிராங் நிலவில் மலையாளி ஒருவரைக் கண்ட குட்டிக் கதை.

விண்வெளியில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மறக்க முடியாத சாதனைகளும், சந்திரயான் - 3 பயணமும்!!

குட்டிக்கதை:

ஆம்ஸ்ட்ராங் சந்திரனை அடைந்தபோது, 60களின் மலையாளப் பாடல் ஒன்று ஒலிப்பதைக் கேட்டாராம். அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே பின்தொடர்ந்து அருகில் சென்று பார்த்தபோது, 'மதம் பறையருத்' (இங்கே மதம் பற்றி பேசாதே) என்று கூறும் பலகையுடன் ஒரு டீக்கடையைக் கண்டாராம்.

அங்கு லுங்கி அணிந்த ஒரு சேட்டன் (அண்ணன்), சூடான தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தாராம். சேட்டன் ஆம்ஸ்டிராங்குக்குத் டீ போட்டுக் கொடுத்தாராம். ஆம்ஸ்ட்ராங் அந்த டீயை ரொம்ப ரசித்துக் குடித்தாராம்.

இந்தக் கற்பனைக் கதை தலைமுறை தலைமுறையாக உயிர்ப்புடன் இருந்துவருகிறது. கார்ட்டூன்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள் இந்தக் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளன. அவை பல தளங்களில் வெளியிடப்பட்டு பிரபலமாகிவிட்டன.

முதலில் நாமக்கல் மண்ணில் தரையிறங்கிய சந்தியரான்-3! இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் பரிசோதனை நடந்தது இப்படித்தான்?

சேட்டன் டீக்கடை:

இந்தக் கதையில் டீக்கடை எங்கிருந்து வந்தது என்பதைத் தெரிந்துகொள்வதும் சுவையான செய்தியாக இருக்கும். அந்த காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னை, தென்னிந்திய சினிமாவின் மையப் புள்ளியாக இருந்ததால், சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்கள் எல்லாம் தங்கள் கனகளோவோடு சென்னையை நோக்கி வருவது வழக்கம்.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடாகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பலரும் சென்னைக்கு வருவார்கள். அப்படி வரும் மலையாளிகள் தங்கள் சினிமா கனவுகள் கைகூடாதபோது, டீக்கடை தொடங்கிவிடுவது வழக்கம். இதனால், சென்னையில் மலையாளிகள் நடத்தும் டீக்கடைகள் அதிகமாகின. தமிழ்த் திரைப்படங்களும் இப்படிப்பட்ட மலையாளிகளின் டீக்கடைகளைத் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

சந்திரயான்-3 விண்கலத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? சவாலான கடைசி 15 நிமிடத்தில் நடக்கப்போவது என்ன?

கேரளா மக்கள் புலம்பெயர்வு:

இதுபோல 130 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பணி நிமித்தமாக பயணம் செய்த மலையாளிகள், நிலவுக்குச் செல்ல ஏதாவது போக்குவரத்து வசதி இருந்தால் அங்கும் மலையாளிகள் செல்வார்கள் என்று தயாரிப்பாளர் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார்.

கேரளா மக்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில், கடந்த கடந்த பத்தாண்டுகளில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் கேரளா நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்வது இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

2018ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த மலையாளி ஒருவர் சந்திரனில் 10 ஏக்கர் நிலத்தை வைத்திருப்பதாகச் ஒரு செய்தி பரவியது. அப்படி மலையாளி ஒருவர் நிலவில் நிலம் வாங்கினால், அவரிடம் கேட்கக்கூடிய முதல் கேள்வி ஒன்றுதான். நீங்கள் எப்போது நிலாவில் டீக்கடை தொடங்கப்போகிறீர்கள்?

வெற்றிநடை போடும் சந்தியரான்-3! நிலவில் தரையிறங்குவதை பார்த்து ரசிக்க இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios