பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் 8 வயது தங்கையை, அவளது உடன் பிறந்த அண்ணனே கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு தம்பதிக்கு 12 வயது மகனும், 8 வயது மகளும் உள்ளனர். இவர்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் போனை அவர்களின் மகன், அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளான். மகன் தானே என்று பெற்றோரும் அவன் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தடுக்கவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் மகன், மகளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, தம்பதி இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். பெற்றோர் சென்ற சிறிதுநேரத்தில், வெளியே சென்ற சிறுவன், மற்ற நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் ஆபாசப் படங்களை பார்த்துள்ளான்.நண்பகல் நேரத்தில் வீட்டுக்கு வந்த அவன், திடீரென ஒன்றுமறியாத தனது 8 வயது தங்கையிடம் அத்துமீறியுள்ளான் இதனால் சிறுமி கடுமையாக காயம் அடைந்துள்ளார். பயந்து போன சிறுவனும் அங்கிருந்து தப்பியுள்ளான். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகள் வலியுடன் துடிப்பதை கண்டதுடன்,  உடனடியாக, அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக, காவல்நிலையத்துக்கும் புகார் அளித்தனர்.மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியின் சகோதரனைப் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். செல்போனில் ஆபாச படம் பார்த்து உடன் பிறந்த சகோதரியையே சிறுவன் பலாத்காரம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.