வெளியுறவுக் கொள்கையில் வாக்கு வங்கி அரசியல்: அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

முந்தைய அரசாங்கங்களின் வெளியுறவுக் கொள்கைகள் வாக்கு வங்கியைக் கவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Foreign Policy of past governments was influenced by votebank politics: Jaishankar

முந்தைய அரசாங்கங்களின் கீழ், வெளியுறவுக் கொள்கைகள் கூட முஸ்லீம் வாக்கு வங்கியைக் கவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

'டாப் ஆங்கிள் வித் சுஷாந்த் சின்ஹா' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய்சங்கர், முந்தைய அரசுகள் வாக்கு வங்கி அரசியலை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தி வருகின்றன என்றார். மேலும், பாகிஸ்தானின் கொள்கையில் வாக்கு வங்கிக் கொள்கையின் அறிகுறிகள் இருந்ததாக நீங்கள் நினைக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.

"1948ல் இஸ்ரேலுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் 1992 வரை இந்தியா தனது தூதரை அங்கு அனுப்பவில்லை. 1992ல் இஸ்ரேலுக்கு தூதரை அனுப்பியபோதும் 2017 வரை இந்தியப் பிரதமர் ஏன் அந்நாட்டுக்குச் செல்லவில்லை? இஸ்ரேல் ஒரு சிறிய நாடு அல்ல. அந்நாட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அவர்கள் நமது பங்காளிகள். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இங்குள்ள சில கட்சிகள் அதை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறுவதை பெரும் சிக்கலாகக் கருதின. அவர்களின் அரசியல் என்ன என்று நம் அனைவருக்கும் தெரியும்" எனக் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நடந்த மும்பை தாக்குதலைப் பற்றி குறிப்பிட்ட ஜெய்சங்கர், 26/11 தாக்குதல் குறித்து காங்கிரஸ் அரசாங்கத்தின் பதிலை விமர்சித்தார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஒருமித்த ஆதரவு இருந்தபோதிலும், காங்கிரஸ் அரசு அதற்கு எதிராக முடிவு எடுத்தது என்று கூறினார். பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பதற்கு அதிக செலவாகும் என்று கருதினார்கள் என்றும் தெரிவித்தார்.

மும்பையில் நடந்ததைப் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதன் முக்கியத்துவத்தையுத் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். பதிலடி கொடுக்கத் தவறினால் மேலும் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகளுக்குத் தைரியம் வந்துவிடும் என்று ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்த ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை எதிர்க்கும் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

'கேரள மக்கள் காங்., இடதுசாரிகள் மீது கோபமாக இருக்கிறார்கள்': அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்புப் பேட்டி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios