மனைவியை உடன் வைத்துக் கொண்டே, கிடைக்கும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு ரகசிய ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக  காதலன் மீது பெங்களூரு வடக்கு மண்டல டி.சி.பி.யிடம் இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 14ம் தேதி வடக்கு மண்டல டி.சி.பி. சேத்தன் சிங் ராத்தோரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்; பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் நான் வேலை பார்த்து வருகிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிக்கமகளூருவை சேர்ந்த கவுரி சங்கர் என்பவருடன் ஃ பேஸ்புக்  மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கவுரி சங்கர் சிக்கமகளூருவில் உள்ள பிரபல தொழில் அதிபருக்கு சொந்தமான தோட்டத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். ஃ பேஸ்புக்  மூலமாகவே பேசிக் கொண்டிருந்த நாங்கள் காதலிக்க தொடங்கினோம்.

பின்னர் நேரில் சந்தித்து பேசி வந்தோம். அப்போது கவுரி சங்கர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். நானும் அதை நம்பினேன், எனக்கு திருமண ஆசையை காட்டி, பெங்களூரு மற்றும் சிக்கமகளூருவில் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்தார்.

திருமணம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையில் நானும் அதற்கு சம்மதித்தேன் மேலும் உல்லாசமாக இருந்த போது எனக்கு தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துக் கொண்டார். சில நாட்கள் ஆனதும், நான் கவுரி சங்கரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார். நானும் தொடர்ந்து வற்புறுத்தினேன்.

இதனால் என்னை கழற்றிவிட நினைத்தார். அதற்காக என்னிடம் ரூ.2.50 லட்சம் வரை பணம் கேட்டு மிரட்டினார். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.இந்நிலையில் காதலித்தபோது உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வருகிறார். ஆகவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்ற டி.சி.பி, அந்த மனுவை, பாகல்குண்டே போலீசாருக்கு அனுப்பி வைத்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.  பாகல்குண்டே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், கவுரி சங்கருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், இவரது இந்த தவறுக்கு இவது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது. மனைவியை உடன் வைத்துக் கொண்டே, கிடைக்கும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது தெரிகிறது. அவரிடம் சிக்கிக் கொண்ட பெண்கள் விவாகரத்து ஆனவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யாரும் அவருக்கு எதிராக புகார் அளிக்க வரவில்லை.  

தற்போது புகார் அளித்துள்ள இளம் பெண்ணும், விவகாரத்து ஆனவர். கவுரி சங்கர் இளம் பெண்ணை அடையவேண்டுமென்ற நோக்கத்தில் தாம் விவகாரத்து ஆனவர் என்று கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் கவுரி சங்கர் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பழகியுள்ளார்.

அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கவுரி சங்கர் இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றியுள்ளது அம்பலமானது. விசாரணையில் இளம் பெண் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்து செய்த   பாகல்குண்டே போலீசார் தனிப்படை அமைத்து கவுரி சங்கரை தேடி வருகின்றனர்.