கேரள உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அதேசமயம், திருவனந்தபுரம் மாநகராட்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளுடன் பாஜக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல்கள் கடந்த ஒன்பதாம் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் ஐந்து பிரிவுகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பல ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் பங்கு கொண்டனர். மாநகராட்சிகள் நகராட்சிகள் ஜில்லா பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துக்கள் என அனைத்து பதிவுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதில் முக்கியமான இடது முன்னணி கம்யூனிஸ்ட் தலைமையிலும் வலது முன்னணி, காங்கிரஸ் தலைமையில் என்டிஏ பிஜேபி தலைமையிலான கூட்டணியும் களத்தில் பங்கேற்றன.

காலை 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள ஆயிரக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் 445 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 370 இடங்களில் கம்யூனிஸ்ட் கூட்டணியும், 23 இடங்களில் பாரதிய ஜனதா கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. இதில் பல இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம் மாநகராட்சி பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி பதவியை கைப்பற்றும் நிலைக்கு ஏற்றியுள்ளது. அதாவது 45 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஆறு இடங்களில் வெற்றி பெற்றால் மேயர் பதவியை பாரதிய ஜனதா கட்சி பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்யா ராஜேந்திரன் அங்கு மேயராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள கோழிக்கோடு மாநகராட்சி பகுதியிலும் பாரதிய ஜனதா கட்சி 10 வார்டுகளில் வெற்றி பெற்று முத்திரையை பதித்துள்ளது. நகராட்சியை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சி 28 நகராட்சிகளிலும், காங்கிரஸ் கட்சி 55 நகராட்சிகளிலும் பாரதிய ஜனதா நான்கு நகராட்சிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 14 மாவட்ட பஞ்சாயத்து இடங்களுக்கான போட்டியில் கம்யூனிஸ்ட் கட்சி ஏழு இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஏழு இடங்களிலும் முன்னிலை பெற்று சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து பொறுத்த வரை பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த இடமும் இல்லை. ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கை ஓங்கி இருந்த நிலையில் தொடர்ந்து படிப்படியாக காங்கிரஸ் கட்சி அதிகரித்து தற்போது அதிக இடங்களை கைப்பற்றும் மாபெரும் கட்சியாக கேரளாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் உருவெடுத்துள்ளது.

அதேபோன்று பெரிய செல்வாக்கு இல்லாமல் இருந்து வந்த பிஜேபி தனது கால் தடத்தை கேரளாவில் பதிய தொடங்கியுள்ளது. பல இடங்களில் மூன்றாம் இடத்திலும் பல இடங்களில் இரண்டாம் இடத்திலும் சில மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை கைப்பற்றும் கட்சியாக புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.