- Home
- இந்தியா
- திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!
கேரள உள்ளாட்சித் தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கோட்டையாக இருந்த இப்பகுதியில் பாஜகவின் இந்த எழுச்சி, புதிய சரித்திரத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல்
101 வார்டுகளை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் 51 சீட்டுகளை எடுப்பவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் கடந்த 9 மற்றும் 12ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி கொடியை ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜக முன்னிலை
மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 6வது சுற்று முடிவின் படி 26 வார்டுகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 16 வார்டுகளை கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியும், ஆறு வார்டுகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் பத்துக்கு மேற்பட்ட வார்டுகளில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் திருவனந்தபுரம் மாநகராட்சி மேற்பகுதி பிஜேபி கைப்பற்ற கூடும் என கூறப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை திருவனந்தபுரம்
தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி தற்போது புதிய சரித்திரம் படைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த முறை ஆர்யா ராஜேந்திரன் என்னும் இளம் பெண் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். கடந்த முறையை 54 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியும் 23 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜுவ் சந்திரசேகர்
தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்காக விருத்தியாகமாக கேரள மாநிலத்தின் பாஜக தலைவர் மாற்றப்பட்டு முன்னாள் மத்திய அமைச்சரும் தொழிலதிபருமான ராஜுவ் சந்திரசேகர் அந்த மாநிலத்தின் பாஜக பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டு திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால் இந்த வெற்றி சாத்தியமாகிறது என பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த நிமிடம் முதலில் பாஜக தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகராட்சி பகுதியில் முன்னிலையில் இருப்பதால் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

