- Home
- Tamil Nadu News
- அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சென்னை காவல்துறை தன்னை கைது செய்ய வந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது வழக்கறிஞருக்காக காத்திருப்பதாகவும் தானும் தனது குழுவினரும் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான. சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவருடன் நெறியாளரான மாலதி பணியாற்றி வருகிறார். இதில், அரசியல், ஊழல் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறார். குறிப்பாக ஆளும் திமுக அரசுக்கு எதிரான விமர்சனம் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது மட்டுமல்லாமல் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் சவுக்கு சங்கர்
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை தேனியில் போலீசார் கைது செய்தனர். கைதின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு எதிரான தனது விமர்சனத்தை அடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
மொத்த டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம்
இந்நிலையில் சவுக்கு சங்கர் நானும் மாலதி மற்றும் மொத்த டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகர காவல்துறை என்னை கைது செய்ய வந்திருக்கிறது. நான் இன்னும் கதவை திறக்கவில்லை. வழக்கறிஞர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீசார் உடனே திறங்கள் என்று சொல்லி உள்ளார்கள். அக்டோபர் இறுதியில் சம்மன் ஒன்று ஆதம்பாக்கம் ஸ்டேசனில் இருந்து வந்தது. என்ன வழக்கு என்று பார்த்தால் ரெட்டன் ஃபாலோ ஒரு படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவர் 30.06.2025 அன்று என் அலுவலகத்திற்கு வந்து என்ன பத்தி அந்த வீடியோவில் தப்பா பேசிட்டீங்க. அந்த வீடியோவை நீக்குங்கள் சொன்னதாகவும், நான் மற்றும் மாலதி, அலுவலகத்தில் இருந்தவர்கள் சேர்ந்து அவரை அடித்து இன்னும் 10 லட்சம் கொடுத்தால் தான் வீடியோவை நீக்குவேன் என்று சொன்னதாகவும், அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆரில் தெரிவித்திருந்தனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண்
இதற்கு பதிலளிக்கும் விதமாக இது முழுக்க பொய் வழக்கு. இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் யாரும் வரவில்லை. இதை என்னுடை விளக்கமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நவம்பர் 1ம் தேதி பதில் கடிதம் அனுப்பி விட்டேன். இதுவரை எந்தவிதமான காவல்துறை தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. நேற்று இரவு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் பினாமி நிறுவனத்தின் மூலம் ஏகப்பட்ட முறைகேடுகளை செய்திருக்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட்டதும் அதிகாலையில் இதே வழக்கில் கைது செய்ய போலீசார் வந்துள்ளனர். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வழக்கறிஞர் வந்த பிறகு தான் கதவு திறக்கப்படும் என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

