- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
NMMS Scholarship: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக (NMMS) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை வழங்கப்படும்.

என்எம்எம்எஸ்
பள்ளி மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கவும், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகின்றது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) மத்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது.
உதவித்தொகை திட்டம்
இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதாவது 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி
அதன்படி இந்த ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கியது. ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வுத் துறை
அதன்பின்னர் பூர்த்தி செய்த படிவங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

