கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு வட மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஏற்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார்.
Karnataka Election Result 2023 Live: கர்நாடக முதலமைச்சர் யார்.?

கர்நாடக முதலமைச்சர் யார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் நாளை நடக்க இருக்கிறது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.
கர்நாடகாவில் நடந்தது.. வட மாநிலங்களிலும் நடக்கும் - கர்நாடக தேர்தல் குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கருத்து
கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்
காங்கிரஸ் உள்ளூர் தலைமையிலான கட்சியின் பிரச்சாரம், ஊழல், உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் 5 வாக்குறுதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தெளிவாக வெற்றி பெற்றது.
அன்று ஜூனியர் வழக்கறிஞர்.. இன்று முதல்வர் வேட்பாளர் - யார் இந்த சித்தராமையா?
நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தி ஆட்சி அமைக்க உள்ளது. அடுத்த முதல்வர் யார் என்ற பட்டியலில் சித்தராமையா பெயரும் இடம்பெற்றுள்ளது.
“முரட்டுத்தனமான சர்வாதிகார அரசியல் ஒழிந்தது” பாஜகவின் தேர்தல் தோல்வி குறித்து மம்தா பானர்ஜி ட்வீட்
கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக
கர்நாடக தேர்தலில் முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட 11 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 14 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி வாழ்த்து!
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
காந்திஜியை போல நீங்களும்.. அன்பால் கிடைத்த வெற்றி! ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல் ஹாசன்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.
12 ஹெலிகாப்டரில் தமிழகத்துக்கு வரும் கர்நாடக காங்கிரஸ் வெற்றி MLAக்கள் - மீண்டும் கூவத்தூர் பார்முலா
காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகுத்து வருகிறது . ஆளும் பாஜக 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
ஏழைகளின் சக்தி தோற்கடித்துள்ளது: ராகுல் காந்தி!!
பாஜகவின் முதலாளித்துவ நண்பர்களின் சக்தியை ஏழைகளின் சக்தி தோற்கடித்துள்ளது என்று கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றியை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
திராவிட நிலப்பரப்பில் பாஜக அகற்றம்: முக ஸ்டாலின் ட்வீட்!!

மகத்தான தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸுக்கு மகத்தான தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றி என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் "மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிலைநாட்டுவோம். எங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவோம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றி" என்று கார்கே கூறினார்.
காந்தி நகர் தொகுதியில் தினேஷ் குண்டுராவ் வெற்றி
காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான தினேஷ் குண்டுடாவ் வெற்றி பெற்றுள்ளார். காந்தி நகர் தொகுதி தமிழர்கள் அதிகம வாழும் பகுதி என்பது குறிப்பிட்டத்தக்கது.
ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது: ராகுல் காந்தி
"கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. கர்நாடக மக்களுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கு நன்றி" என்று ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார்.
ஹூப்ளி தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி
ஹூப்ளி தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முன்னாள் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மகேஷ் டெங்கினகை வெற்றி பெற்றிருக்கிறார்.
மக்கள் கொடுத்த தீர்ப்பே ஏற்கிறோம்: எடியூரப்பா
"கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. பாஜகவுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். கடந்த 4 மாதங்களாக ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறேன்" என பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூறி இருக்கிறார்.
ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி முகம்
ஹூப்ளி தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி முகத்தை எதிர்கொண்டிருக்கிறார்.
தினேஷ் குண்டுராவ் முன்னிலை
தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகிக்கிறார்.
தோல்வியை ஒப்புக்கொண்டது
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது - பாஜக
''வெற்றிக்கான இடங்களை எங்களால் பெற முடியவில்லை, முடிவுகள் முழுவதுமாக வந்ததும், எங்கே வெற்றிவாய்ப்பை தவறவிட்டோம் என அலசுவோம்'' பசவராஜ் பொம்மை!
கொரட்டகரே தொகுதியில் ஜி. பரமேஷ்வரா 56,077 வாக்குகள் பெற்று முன்னிலை
கொரட்டகரே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஜி. பரமேஷ்வரா 56,077 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். ஜனதா தளம் கட்சியின் பி. ஆர். சுதாகர் லால் 43,637 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
கர்நாடக பாஜக அலுவலகத்தில் நுழைந்த பாம்பு.. பீதியடைந்த தொண்டர்கள்.. வைரல் வீடியோ.
முதல்வர் பசவரக் பொம்மை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்குச் சென்றபோது ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. பா.ஜ.க., அலுவலக வளாகத்தில் பசவராஜ் பொம்மை வந்தபோது பாம்பு ஒன்று நுழைந்தது.