அன்று ஜூனியர் வழக்கறிஞர்.. இன்று முதல்வர் வேட்பாளர் - யார் இந்த சித்தராமையா?
நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தி ஆட்சி அமைக்க உள்ளது. அடுத்த முதல்வர் யார் என்ற பட்டியலில் சித்தராமையா பெயரும் இடம்பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. மொத்தமுள்ள 224 இடங்களில் பெரும்பான்மைக்கு 113 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ்.
இதையடுத்து கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற பரபரப்பு தொற்றியுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் மூத்த தலைவருமான சித்தராமையாவை மீண்டும் முதலமைச்சாரக நியமிக்க வேண்டும் என அவர் தரப்பு ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். அதேவேளை, மாநில காங்கிரஸ் தலைவரான டிகே சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்றும் அவர் தரப்பு ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.
கட்சி மேலிடம் தான் இறுதி முடிவை எடுக்கும் என்று கருதப்படுகிறது. சித்தராமையா யார் என்பதை பார்க்கலாம். சித்தராமையா கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக 2013 ல் பதவி வகித்தார். தொழில் ரீதியாக வழக்கறிஞர் ஆன இவர், பேராசிரியர் நஞ்சுண்ட சுவாமி சமாஜ்வாடி யுவஜன சபையில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1978 வரை இளைய வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.
இதையும் படிங்க..கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக
கர்நாடக சட்டசபையில் பல்வேறு பதவிகளை வகித்தார். அவர் இந்திய தேசிய காங்கிரஸின் முக்கியமான அரசியல் பிரமுகராக பிறகு மாறினார். முன்னதாக அவர் ஜேடிஎஸ் தலைவராகவும் பணியாற்றினார். இரண்டு முறை மாநிலத்தின் துணை முதல்வராக இருந்தார். இவர் குருபா சமூகத்தின் தலைவராக இருக்கும் இவர், எச்.டி.தேவே கவுடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, சித்தராமையா 2005-06ல் ஜேடி(எஸ்) கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த பிறகு. காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருந்தார். தற்போது, வருணா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க..அமுதா ஐஏஎஸ் முதல் உதயசந்திரன் வரை.. வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மாற்றிய அதிகாரிகள் யார்?