12 ஹெலிகாப்டரில் தமிழகத்துக்கு வரும் கர்நாடக காங்கிரஸ் வெற்றி MLAக்கள் - மீண்டும் கூவத்தூர் பார்முலா
காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகுத்து வருகிறது . ஆளும் பாஜக 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த மே 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், பாஜக ,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பெரும் கட்சிகள் மோதிக்கொண்டன. இதையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கியது. ஆரம்பம் முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகுத்து வருகிறது.
ஆளும் பாஜக 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. இதன் காரணமாக ஆளும் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில், கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்களில் ஐந்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், நாளை (மே 14) காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரு வர காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மற்றொரு தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தங்க வைக்க திட்டமிட்டுள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களைப் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க..1 மணி நேர ஆடியோ இருக்கு.. பிடிஆர் பாவம்! இன்னொரு வழக்கு போடுங்க பார்க்கலாம் - அண்ணாமலை சவால்