கர்நாடக பாஜக அலுவலகத்தில் இன்று காலை பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஷிக்கான் சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமையன்று அம்மாநில முதல்வர் பசவரக் பொம்மை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்குச் சென்றபோது ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. பா.ஜ.க., அலுவலக வளாகத்தில் பசவராஜ் பொம்மை வந்தபோது பாம்பு ஒன்று நுழைந்தது.
பாம்பை பார்த்த உடன், பாஜக அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பாம்பு பிடிக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பாஜக அலுவலகத்தில் இருந்த காவலர்கள் பாம்பை பிடிப்பதைக் காண முடிந்தது.
இதனிடையே மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 123 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் பாஜக 69 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்று பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் யாஷி அகமது கானை தோற்கடித்தார்.
