Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவிடம் தன் கொடூர முகத்தை காட்டிய சீன..!! மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்த இந்திய படை..!!

ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விமானம் சீனக் கப்பலை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.  உடனே இந்திய  கடற்படை சீன கப்பலை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்தது .  

Indian navy force Chinese navel ship to retreat from Andaman ocean
Author
Delhi, First Published Dec 4, 2019, 11:43 AM IST

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் போர்க்கப்பலை இந்திய கப்பல் படை வீரர்கள் விரட்டியடித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவும் சீனாவும் நட்பு நாடுகளைப் போல காட்டிக்கொண்டாலும்,  இருநாடுகளுக்கும் இடையே பகை நீறுபூத்த நெருப்பாக இருந்துகொண்டே இருக்கிறது . காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட மோதலில் சீனா பாகிஸ்தானின் பக்கம் நின்றே அதற்கு சாட்சி.  அதிலிருந்தே இந்தியா மீது சீனாவுக்கு உள்ள குரோதத்தை  நாம் புரிந்துகொள்ள முடியும் . 

Indian navy force Chinese navel ship to retreat from Andaman ocean

அதே நேரத்தில் இந்தியாவை தனிமைப்படுத்தும் முயற்சிகளிளும் பாகிஸ்தான் சீனா இணைந்து செயல்பட்டு வருகிறது .  சர்வதேச அளவிலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே சீனா  எடுத்து வருகிறது.  அதே நேரத்தில் இந்தியாவின்  வளர்ச்சியை சீனா விரும்பவில்லை இந்நிலையில் இலங்கையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா திட்டமிட்டு வருகிறது .  இந்நிலையில் அடிக்கடி இந்திய கடற் பகுதிக்குள் நுழைந்து தன் எதேச்சதிகார போக்கை காட்டி வருகிறது சீனா. இந்திய கடப்பாரையை தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயர் அருகே சீனாவின் ஷி- யான் -1 என்ற சீன ஆராய்ச்சி கப்பல் ( அது போர்க்கப்பல் எனவும் சந்தேகிக்கப்படுகிறது) நிறுத்தப்பட்டிருந்தது.  
இதனையடுத்து அந்தப் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விமானம் சீனக் கப்பலை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.  உடனே இந்திய  கடற்படை சீன கப்பலை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்தது .  

Indian navy force Chinese navel ship to retreat from Andaman ocean

உடனே சீன கப்பல் அவசரகதியில் அங்கிருந்து சென்றதாக தெரிவித்தார்.  அந்தமான் கடல் பகுதியில் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம் செயல்படுவதால் ,  அப்பகுதியில் வெளிநாட்டுக் கப்பல்கள் அனுமதிக்கப்படுவதில்லை , ஆனால் சீனா கடற்படை அடிக்கடி அந்தமான் நிக்கோபார் பகுதிகளில்  ஊடுருவி இந்தியாவை நோட்டமிட்டு வருவது குறிப்பிடதக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios