சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம்! சந்திரயான்-2 ல் இல்லாத சிறப்பு அம்சம் என்னென்ன தெரியுமா?
இஸ்ரோவின் (ISRO) கனவுத் திட்டமான சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எல்.வி.எம்.3 (LVM3) ராக்கெட் மூலம் நாளை பகல் 2.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நாளை பகல் 2.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எல்.வி.எம்.3 (LVM3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் (ISRO) கனவுத் திட்டமான இந்தப் பணியைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்துப் பார்க்கலாம்.
சந்திரயான்-3 திட்டத்தின் நோக்கம்
சந்திரயான்-3 என்பது முழு வெற்றி அடையாத சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். சந்திரயான்-2 பயணத்தின் அதே நோக்கத்தைக் கொண்டதுதான் சந்திராயன்-3. நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவரை மெதுவாக தரையிறங்கி நிலவை ஆராய்வது தான் முக்கிய நோக்கம்.
சந்திரயான் -2 பணியானது செப்டம்பர் 6, 2019 எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காமல் முடிந்தது. விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மெதுவாக தரையிறங்குவதில் தவறிவிட்டது. விண்கலம் இறங்கத் தொடங்கிய சுமார் 13 நிமிடங்களில் தோல்வி உறுதியானது. அந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்று சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் மென்மையாக தரையிறங்க இருக்கின்றன.
சந்திராயன் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்... இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல்!
விக்ரம் லேண்டர்
தரையிறங்க சாதகமான தளத்தைத் தேர்வு செய்வது மென்மையான தரையிறக்கத்தை உறுதி செய்வதில் விக்ரம் லேண்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது 4 கிலோமீட்டர் நீளம் மற்றும் 2 கிலோமீட்டர் அகலம் கொண்டது. நிலவில் மேற்பரப்பு, வெளிச்ச நிலைமைகள் மற்றும் சாத்தியமான அபாயங்கள் போன்ற முக்கியமான அம்சங்களைப் பொருத்து சரியான இடத்தைத் தேர்வு செய்யும்.
இஸ்ரோவின் கூற்றுப்படி, விக்ரம் தரையிறங்கும் வேகம் வினாடிக்கு 2 மீட்டர் என்பதில் இருந்து வினாடிக்கு 3 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 3 மீட்டர் வேகத்தில் தரையிறங்கினால்கூட, லேண்டர் விபத்துக்குள்ளாகாது அல்லது அதன் கால்கள் உடையாது என உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்திரயான்-2 பயணத்தின் போது இந்த விக்ரம் லேண்டரில் ஏற்பட்ட தவறுதான் தான் தரையிறங்கும் நேரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் இஸ்ரோ சந்திரயான்-3 இன் மென்பொருளில் மேம்பாடுகளைச் செய்து, இயந்திரக் கோளாறுகள், உந்துதல் சீர்குலைவுகள் மற்றும் சென்சார் செயலிழப்புகள் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 கவுண்டவுன் தொடங்கியது! ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!
சந்திரயான்-3 விண்கலம்
சந்திரயான் -3 விண்கலம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது - லேண்டர் தொகுதி, புரபுல்சன் மற்றும் ஒரு ரோவர். நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கும், ரோவரை நிலைநிறுத்துவதற்கும் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோவர் நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளும். லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் நிலவின் மேற்பரப்பில் சோதனைகளுக்கு தேவையான பல அறிவியல் கருவிகளைச் சுமந்து செல்கின்றன.
Chandrayaan 3 : சந்திரயான்-2 ல் இல்லாத சிறப்பு அம்சம் என்னென்ன தெரியுமா?
லேண்டர் மற்றும் ரோவரை ராக்கெட்டிலிருந்து பிரிவதற்கு முந்தைய கட்டம் வரை கொண்டு செல்வது புரபுல்சன் தொகுதியின் முக்கியப் பணியாகும். இந்த புரபுல்சன் தொகுதி லேண்டரும் ரோவரும் பிரிந்த பிறகும் தனியே இன்னும் பல பணிகளுக்காகச் செயல்படத் தொடங்கும்.
சந்திரயான்-3 அனைத்து வகையில் வெற்றி பெற வேண்டும்: இஸ்ரோ முன்னாள் தலைவர்!
சந்திரயான்-3 இன் எல்விஎம்-3
எல்.வி.எம்.-3 (LVM-3) என்பது ஆல் உருவாக்கப்பட்ட மூன்றாம் நிலை நடுத்தர ஏவுகணை வாகனம் ஆகும். இதற்கு முன்பு ஜி.எஸ்.எல்வி. மார்க் மார்க் III (GSLV Mark III) என அறியப்பட்டது. இது இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆகும். இதுதான் சந்திரயான் -3 பணியை ஏவுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இது 43.5 மீட்டர் உயரமும் 4 மீட்டர் விட்டமும் கொண்டது. இது 640 டன் எடையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. இது 8,000 கிலோகிராம் எடையுள்ள சுமைகளை பூமியின் கீழ்மட்ட சுற்றுப்பாதை வரை கொண்டு செல்ல முடியும். அதற்கு மேல் சென்றால், இது சுமார் 4,000 கிலோகிராம் எடையை புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது.
இது மேல் நிலை கிரையோஜெனிக் CE-20 ஆல் இயக்கப்படுகிறது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய கிரையோஜெனிக்ஸ் இயந்திரமாகும். இது புறப்படுவதற்கு தேவையான உந்துதலை வழங்க இரண்டு S200 திட ராக்கெட் பூஸ்டர்களையும் பயன்படுத்துகிறது.
சந்திரயான் -2 பயணம் அதன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மற்றும் ஒரு ஆர்பிட்டரை உள்ளடக்கியதாக இருந்தது. சந்திரயான் -3 ஒரு லேண்டர் மற்றும் ரோவர் இரண்டுடன் தான் விண்ணில் ஏவப்படும். சந்திரயான்-2 மூலம் ஏவப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை வட்டமிடும் நிலையில் உள்ளது. அதுவே சந்திரயான்-3 பயணத்திலும் தகவல் தொடர்பு மற்றும் மேப்பிங் தேவைகளுக்குப் பயன்படுத்தும்.
சந்திரயான் 3 வெற்றி பெற செயற்கைகோள் மாதிரியை கடவுள் காலடியில் வைத்து இஸ்ரோ குழுவினர் சிறப்பு வழிபாடு
தென் துருவத்தில் என்ன இருக்கிறது?
சந்திரன் எப்போதும் விஞ்ஞானிகளின் கவனத்தை கவர்ந்து வந்துள்ளது. நிலவை அடையவும், அதன் மேற்பரப்பில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் தேடவும் கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விஞ்ஞான ஆர்வலர்களுக்கு அதன் தென் துருவம் அதிக ஈர்ப்பு மிக்கதாக உள்ளது.
நிலவின் தென்திருவம் இதுவரை யாரும் பார்க்காத பகுதி ஆகும். நிலவு பூமியைச் சுற்றும் நேரமும் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் நேரமும் ஒன்றாக இருப்பதால் நிலவின் ஒரு பகுதியை பூமியிலிருந்து பார்க்க முடியாது. அந்தப் பகுதிகளில் நீர் பனிக்கட்டியாக இருப்பது சந்திரயான்-1 மூலம் உறுதியானது. மேலும், சந்திரனின் தென் துருவ மேற்பரப்பில் உள்ள பள்ளங்களில் சூரிய ஒளி அடைய முடியாது. இதனால் அந்தப் பகுதியில் என்ன இருக்கிறது என்பதை ஆராய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலமும் முயற்சி செய்ய உள்ளது.