அரசு பள்ளிகளில் தரம் குறைவதால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் அரசுடன், தனியார் இணைந்து பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கலாம் எனவும் மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை அளித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திட்டக்குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.

அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நிதி ஆயோக் இன்று மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், அரசு பள்ளிகளில் தரம் குறைவதால் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்று கூறியுள்ளது.

2010 ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 1.13 கோடி குறைந்துள்ளதாக கூறியுள்ளது. 

2010 ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் தரம் குறைவதால், மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளது. மேலும் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் இந்த பரிந்துரையை நிதி ஆயோக் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

அரசுடன், தனியார் இணைந்து பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கலாம் என்றும், சரியாக செயல்படாத, போதிய மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கவும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரையால் எதிர்ப்பு கிளம்பும் என்று கூறப்படுகிறது. ஏர் இந்தியா, கட்டுமான நிறுவனங்கள் என பல்வேறு அரசு நிறுவனங்ளை நடத்தும் மத்திய அரசு, இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஏன் ஈடுபடுகிறது என்ற தற்போது கேள்வி எழுந்துள்ளது.