Asianet News TamilAsianet News Tamil

வாரிசுதாரர் வேலைக்கு இனி கல்வித் தகுதி தேவையில்லை….ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு …

Employment for railway employees job
Employment for railway employees job
Author
First Published Apr 19, 2018, 6:32 AM IST


ரயில்வேயில் டி பிரிவு ஊழியர்கள் பணக்காலத்தில் மரணமடைந்தாலோ அல்லது நோய் காரணமாக ஓய்வு பெற்றாலோ, வாரிசுதாரரான அவரது மனைவிக்கு வேலை வழங்குவதில் இனி கல்வித் தகுதி பின்பற்றப்படமாட்டாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வேயில் வாரிசுதாரருக்கு பணி வழங்கப்படும் போது இதுவரை குறைந்த பட்ச கல்வித்தகுதியாக அவர் 10–ம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

ஆனால் இதுபோன்ற பல சம்பவங்களில் வாரிசுதாரருக்கு குறிப்பிட்ட கல்வித்தகுதி இல்லை என பல்வேறு ரெயில்வே கோட்டங்களில் இருந்து ரெயில்வே வாரியத்துக்கு புகார்கள் வந்தன.

இதுபற்றி ரெயில்வே வாரியம் துறை அமைச்சகத்துடன் தீவிர ஆலோசனை நடத்தியது. இதையடுத்து  இந்த பிரிவில் குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ற விதியை நீக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் அனைத்து கோட்டங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios