நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது . ஆகஸ்ட் 14 ம் தேதியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியது . 

 20 ம் தேதி காலை  சரியாக 9 .30 மணியளவில் நிலவின் வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது . நிலவின் சுற்றுவட்டப்  பாதையை தற்போது சுற்றி வரும் சந்திராயன் 2 விண்கலம் நேற்று பகல் 12.50 மணியளவில் வெற்றிகரமாக மாற்றப்பட்டிருக்கிறது .

இஸ்ரோவின் தகவலின்படி நிலவுக்கு 114 கிலோமீட்டர் அருகிலும் 18 ஆயிரத்து 72 கிலோ மீட்டர் தொலைவிலும் சந்திரயான்- 2 விண்கலம் சுற்றி வந்து கொண்டிருக்கிறது . வரும் 28ம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள்  மாற்றப்படும் சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்றுப்பாதை  , மீண்டும்  செப்டம்பர் 1ம் தேதி  மாற்றி அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.