Asianet News TamilAsianet News Tamil

பிப்.1-ல் தாக்கலாகும் பொது பட்ஜெட் ரத்தா?

central budget
Author
First Published Jan 4, 2017, 9:34 PM IST
பிப்.1-ல் தாக்கலாகும் பொது பட்ஜெட் ரத்தா?

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதையடுத்து, பிப்ரவரி 1-ந்தேதி ரெயில்வே-பொது பட்ஜெட் ரத்து செய்யப்படுமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

சிக்கல்

ஏனென்றால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும். அப்படி இருக்கையில் மத்தியஅரசு பட்ஜெட்டில் பல சலுகைகளை தேர்தல் நடக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் சேர்த்து அறிவிக்கும்போது அது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். ஆதலால்,பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுமா? என மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இதே கேள்வியை எதிர்க்கட்சிகளும், மத்தியில் ஆளும் பாரதியஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகளும் எழுப்பியுள்ளதால், மோடி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போர்க்கொடி

5 மாநிலத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏன் பட்ஜெட்வாக்குப்பதிவுக்கு முன் தாக்கல் செய்யப்பட வேண்டும். இது வாக்காளர்களை பாதிக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

குடியரசு தலைவரிடம் மனு

இது தொடர்பாக 16 எதிர்க்கட்சிகள் இணைந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஆகியோருக்கு பொது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதியுள்ளார். அவ்வாறு பிப்ரவரி முதல்தேதி மத்தியஅரசு பட்ஜெட் தாக்கல் செய்தால் அது வாக்காளர்களை கவர்ந்து இழுத்து, ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ளன. மேலும், கடந்த 2012ம் ஆண்டு 5 மாநிலத் தேர்தல் நடந்த போது,பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதி ஒத்திவைக்கப்பட்டது என்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

திட்டம்

மத்தியஅரசின் திட்டப்படி ஜனவரி 31-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிபிப்ரவரி 9-ந்தேதி வரை நடக்கிறது. இம்மாதம் 31-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், பிப்ரவரி 1-ந்தேதி ரெயில்வே-பொது பட்ஜெட்டும் இணைந்து தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் பட்ஜெட்கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்படுகிறது.

பாக்ஸ் மேட்டர்.....

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

சிவசேனா-

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியான சிவசேனா கட்சியின் தலைவர்  உத்தவ்தாக்ரே கூறுகையில், “ சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி.கள் குழு விரைவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து பட்ஜெட்டை தள்ளிவைப்பது குறித்து பேசுவார்கள். பட்ஜெட் மூலம் மக்களை திசைதிருப்ப பாரதிய ஜனதா அரசு முயல்கிறது என எண்ணுகிறோம்'' எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ்-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறுகையில், “ 5 மாநிலத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்தான்பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் அது வாக்களார்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். பட்ஜெட்டைதள்ளிப்போட வேண்டியது அவசியமாகும்'' எனத் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், “ நியாயமான, நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும். ஆதலால், பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்'' எனத் தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், “ மத்தியஅரசின் பொது பட்ஜெட் வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை தள்ளிவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவோம்'' எனத் தெரிவித்தார்.

பாக்ஸ் மேட்டர்.....

அரசியலமைப்பு சட்டத்துக்கு அவசியமானது

மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கையில், “ பட்ஜெட் கூட்டத்தொடரை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பை இல்லை. இது அரசியலமைப்புச்சட்டத்துக்கு தேவையானது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என்பது அரசியலமைப்புக்கு அவசியமானது என்பதால் அதை தள்ளிப்போட முடியாது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரும்போது கூட, காங்கிரஸ் கட்சி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது'' என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios