வாகன ஓட்டிகளே கவனம்.. இந்த போர்டு இருந்தால், வாகனத்தை நிறுத்த வேண்டாம்.. ஆபத்து..

நீலநிற போர்டில் வெள்ளை அம்புக்குறி உள்ள சாலையில், வாகனங்களை நிறுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Attention motorists.. If you see this road sign, do not stop the vehicle..

இன்றைய உலகில் சாலை போக்குவரத்து என்பது ஒவ்வொரு மனிதனின் ஒரு அங்கமாகிவிட்டது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் தினமும் சாலை போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  தற்போதைய போக்குவரத்து அமைப்பு தூரத்தை குறைத்திருந்தாலும், மறுபுறம் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் பலத்த காயமடைகின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இது உலகெங்கிலும் உள்ள மொத்த இறப்புகளில் 13 சதவீதம் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விபத்துக்கள் கவனக்குறைவு காரணமாகவோ அல்லது சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு உயிர்வாழ்வதற்கான மற்ற அடிப்படைத் திறன்களைப் போலவே சாலைப் பாதுகாப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வும் இன்றியமையாதது.

இதையும் படிங்க : நாட்டில் 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. தமிழ்நாட்டிற்கு எத்தனை..?

எனவே மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இந்த சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முழுமையாக தெரிந்துகொண்டால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும். மேலும் சாலை விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனில் வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். அதிலும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் நபர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் ட்விட்டரில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த பதிவில் “ நீல நிற பலகையில் வெள்ளை நிற மேல்நோக்கி சுட்டிக்காட்டும் அம்புக்குறி போடப்பட்டிருக்கும். அனைத்து சாலைகளும் போக்குவரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்த போர்டு உள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ அல்லது எந்தப் பக்கமும் திரும்பவோ கூடாது என்பதே இதன் அர்த்தம்.

அதாவது, Compulsory ahead என்று அர்த்தம். இந்த போர்டு இருக்கும், சாலையில் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி செல்ல வேண்டும். எந்தவொரு காரணத்திற்காகவும் இடையில் நிறுத்த கூடாது. எக்காரணம் கொண்டும் சாலையில் வாகனத்தை வளைக்கவோ அல்லது திருப்பவோ கூடாது.

ஏனெனில் இந்த சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் மிக வேகமாக செல்லும் என்பதால், இடையில் வாகனத்தை நிறுத்தினால் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீலநிற போர்டில் வெள்ளை அம்புக்குறி உள்ள சாலையில், வாகனங்களை நிறுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க : சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல்.. முக்கிய எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு படையினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios