Assembly Election Results 2023 Live : 3 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் பாஜக..!

assembly-election-results-2023-rajasthan-madhya-pradesh-telangana-chhattisgarh-mizoram-bjp-congress-live

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்து முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

11:30 PM IST

இந்த பேங்கை மூடிய ரிசர்வ் வங்கி.. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உத்தரவு.. முழு விபரம் இதோ !!

ரிசர்வ் வங்கி இந்த வங்கியை மூடியது. வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு பணம் மட்டுமே கிடைக்கும். இதனைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

11:16 PM IST

அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. ஆடிப்போன அதிகாரிகள்.. திடீர் விசிட்

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

10:05 PM IST

நாள் குறித்த டெக்னோ.. பட்டையை கிளப்ப வரும் Spark Go 2024 - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 இந்தியாவில் டிசம்பர் 4 அன்று வெளியிடப்பட உள்ளது. இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

9:44 PM IST

கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் பலிக்கும்.. விஜயகாந்த் நலம்பெற நடிகர் சூர்யா விருப்பம்..

“அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்" என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

9:15 PM IST

“ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்”.. தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

8:59 PM IST

இனி வெறும் ரூ.600க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் கிடைக்கும்.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசாங்கம்  21 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் வீட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் குறைந்துள்ளது.

7:01 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 113 கிமீ போகலாம்.. பஜாஜ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

பஜாஜ் நிறுவனம் சேடக் அர்பேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

6:38 PM IST

மத்திய பிரதேசத்தில் மலரும் தாமரை.. முதல்வர் போட்டியில் முந்தும் 3 பேர்.. யாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும்.?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக 165 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 65 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதுதான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.

5:15 PM IST

“பை பை கே.சி.ஆர்”.. தெலங்கானாவில் மண்ணை கவ்விய கே.சி.ஆர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

தெலங்கானாவில் காங்கிரஸ், ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து வெற்றி முகத்துக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இது ஆறுதல் வெற்றி என்று கூறப்படுகிறது.

5:00 PM IST

நல்லாட்சியில் இந்திய மக்கள் நம்பிக்கை: பிரதமர் மோடி!

இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

4:42 PM IST

நோ டென்ஷன்.. 2024 தேர்தலை பாத்துக்கலாம் ஜி.. இந்தியா கூட்டணியில் முக்கிய ட்விஸ்ட்.. திமுக வேற இருக்கே..!

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு வெற்றியைப் பெற்று, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கத் தயாராக உள்ளது.

4:38 PM IST

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாக்கத்துறை புகார்!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது

3:30 PM IST

தெலங்கானா தேர்தல் முடிவுகள்: அதே காட்சிகள்... அதீத நம்பிக்கையின் தோல்வியா?

தெலங்கானா மாநிலத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் தோல்விக்கு அக்கட்சியின் அதீத நம்பிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது

1:54 PM IST

ராஜஸ்தானில் ஆட்சியமைக்கும் பாஜக: அடுத்த முதல்வர் யார்?

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ளது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

12:56 PM IST

தலைகீழாக மாறிய சத்தீஸ்கர் களம்.. 3 மாநிலங்களில் பாஜக முன்னிலை - காங்கிரஸுக்கு ஆறுதல் தந்த தெலுங்கானா!

Chhattisgarh Election 2023 : மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தனது வெற்றியின் பாதி வழியைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

12:56 PM IST

காந்தி பவனில் ரேவந்த் ரெட்டி

தெலங்கான மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிற்பகல் 1 மணிக்கு கட்சி தலைமை அலுவலகமான காந்தி பவனுக்கு மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி செல்கிறார்.

12:27 PM IST

3 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் பாஜக..!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்து முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

12:15 PM IST

டிச.,6ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது

11:45 AM IST

ராஜஸ்தான் தேர்தலில் அசோக் கெலாட், சச்சின் பைலட் முன்னிலை

சர்தார்புரா தொகுதியில் முதலமைச்சர் அசோக் கெலாட், டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் முன்னிலை பெற்றுள்ளனர். 

11:43 AM IST

தேர்தல் ஆணைய இணையதளத்தில் ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களில் முன்னிலை

ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 67 இடங்களிலும், மற்ற கட்சிகள் 9 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், பாரத் ஆதிவாசி கட்சி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

11:20 AM IST

ராகுலின் பாரத் ஜோடோ... ஆற்றல்மிக்க ரேவந்த்: தெலங்கானாவை தட்டி தூக்கிய காங்கிரஸ்!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, ஆற்றல் வாய்ந்த ரேவந்த் ரெட்டியின் வியூகம் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது

11:15 AM IST

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பின்னடைவு!

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் பதான் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். 
பாஜக வேட்பாளர் விஜய் பாகேல் 5375 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

10:54 AM IST

சத்தீஸ்கரில் திடீர் திருப்பம்! காங்கிரஸை முந்தியது பாஜக..!

சத்தீஸ்கரின் 78 இடங்களின் நிலவரங்கள் வெளியான நிலையில் காங்கிரஸ் 43 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேசமயம் மற்ற ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.

10:46 AM IST

ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை

ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 105 இடங்களை தாண்டி பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. அதேபோல், ஆளும் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பெற்றுள்ளது. 

10:43 AM IST

மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கிறது

மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. 136 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக. காங்கிரஸ் 89 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

10:32 AM IST

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் முன்னிலை!

சத்தீஸ்கரின் பதான் சட்டப்பேரவை தொகுதியில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் முன்னிலையில் உள்ளார்.

10:24 AM IST

தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பெருபான்மைக்கு தேவையான 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் 35 இடங்களிலும், பாஜக 7 தொகுகளில், ஏஐஎம்ஐஎம் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  

10:07 AM IST

டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் தொடர்ந்து முன்னிலை

ராஜஸ்தானில் டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் 1,173 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

10:05 AM IST

தேர்தல் ஆணைய இணையதள தகவலின் படி மத்திய பிரதேசத்தில் பாஜக 148 இடங்களிலும் பாஜக முன்னிலை

தேர்தல் ஆணைய இணையதள தகவலின் மத்திய பிரதேசத்தில் பாஜக 148 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

9:57 AM IST

மத்திய பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை..!

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 130 இடங்களிலும், காங்கிரஸ் 96 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. களநிலவரத்தை பார்க்கும் போது மீண்டும் பாஜக ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது. 

9:46 AM IST

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி: கமல்நாத் நம்பிக்கை!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆட்சியமைக்கும் என அம்மாநில தலைவர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

9:46 AM IST

தெலங்கானாவில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.. 4வது இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக

தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பெருபான்மைக்கு தேவையான 60க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் 35 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 6 இடங்களிலும், பாஜக 5 தொகுகளில் மட்டும் முன்னிலை பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

9:31 AM IST

தெலங்கானா தேர்தல் முடிவுகள்: முதல்வர் கேசிஆர் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு!

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்

9:29 AM IST

9:28 AM IST

கரீம்நகர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய்குமார் முன்னிலை

தெலங்கானாவில் கரீம்நகர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய்குமார் முன்னிலை பெற்றுள்ளார். 

9:24 AM IST

தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையில்.. பின்னடைவில் பிஆர்எஸ் கட்சி

தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 66 இடங்களிலும், பிஆர்எஸ் 40 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

9:22 AM IST

2 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை!

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

9:16 AM IST

முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் முன்னிலை

சிந்த்வாரா சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவை சேர்ந்த விவேக் புந்தி சாகு பின்னடைவை சந்தித்துள்ளார். 

9:15 AM IST

காலை 9 மணி முன்னிலை நிலவரம்

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 219/230

பாஜக - 124

காங்கிரஸ் - 94

பகுஜன் - 00

மற்றவை - 01

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 109/119

காங்கிரஸ் - 62

பிஆர்எஸ் - 36

பாஜக - 05

மற்ற-06

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 195/199

பாஜக-104

காங்-86

பகுஜன்-00

மற்ற-05

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 86/90

காங்-44

பாஜக-41

ஜெசிசி-00

மற்ற-01

9:01 AM IST

முன்னிலை நிலவரம்

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 141/230

பாஜக - 83

காங்கிரஸ் - 58

பகுஜன் - 0 

மற்றவை - 0

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 71/119

காங்கிரஸ் - 40

பிஆர்எஸ் - 26

பாஜக - 05

மற்ற-00

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 170/199

பாஜக-99

காங்-72

பகுஜன்-00

மற்ற-02

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 78/90

காங்-44

பாஜக-34

ஜெசிசி-00

மற்ற-00

9:01 AM IST

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

சத்தீஸ்கரில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் விறு விறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 46 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

8:52 AM IST

மத்திய பிரதேசத்தில் மாறி மாறி முன்னிலை

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறது.  தற்போது பாஜக 91 இடங்களிலும், 88 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

8:50 AM IST

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முன்னிலை

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் தங்களது தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

8:46 AM IST

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தெலங்கானா - காங்கிரஸ்
மத்தியப் பிரதேசம்  -காங்கிரஸ்
ராஜஸ்தான்: காங்கிரஸ் - பாஜக கடும் போட்டி
சத்தீஸ்கர்  -காங்கிரஸ்

8:45 AM IST

தபால் வாக்கு எண்ணிக்கை: 4 மாநிலங்களில் யார் முன்னிலை?

நான்கு மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன

8:43 AM IST

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களிலும் முன்னிலை

சத்தீஸ்கரில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் விறு விறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் 48 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

8:40 AM IST

தெலங்கானாவில் 45 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

தெலங்கானாவில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 45 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியும், பிஆர்எஸ் கட்சி 25 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

8:25 AM IST

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல்.. காங்கிரஸ் முன்னிலை

சத்தீஸ்கரில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 38 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியும், பாஜக 24 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

8:21 AM IST

Assembly election Results தொடங்கியது வாக்கு எண்ணிக்கை: சத்தீஸ்கர், தெலங்கானாவில் வெற்றி - காங்., நம்பிக்கை!

சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

8:20 AM IST

மத்திய பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜக 45 இடங்களிலும், 46 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

8:18 AM IST

ராஜஸ்தானில் 16 இடங்களில் பாஜக முன்னிலை

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது பாஜக 16 இடங்களிலும், 14 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

8:05 AM IST

ராஜஸ்தானில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

 ராஜஸ்தானில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 33 மாவட்டங்களில் 36 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

8:01 AM IST

4 மாநில தேர்தல் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

7:51 AM IST

இன்னும் சற்று நேரத்தில் சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்..!

மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, சர்குஜாவில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையை வாக்கு எண்ணும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

7:41 AM IST

மோடியா.? ராகுலா.? 4 மாநில தேர்தலில் யார் வெற்றி பெற போறாங்க.? வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. யார் ஆட்சியை தக்கவைப்பார்கள்.? யார் ஆட்சியை பிடிப்பார்கள்  என நாடே ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளது.

7:19 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 

6:56 AM IST

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

6:22 AM IST

4 மாநில தேர்தல் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது

 சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  இந்த 4 மாநிலங்களில் முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிந்து விடும். எந்த கட்சி ஆட்சியை அமைக்கும் என்பது பிற்பகலில் உறுதியாவிடும். 

12:30 AM IST

மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல் முடிவு

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கலாம் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜன் கி பாத், ரிபப்ளிக், டிவி 9 , பி-மார்க் நடத்திய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:28 AM IST

சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் - ஜெயிக்கப்போவது யார்?

சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் உள்ள காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெரும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

12:28 AM IST

ராஜஸ்தான் தேர்தல் - பாஜக வெற்றிபெறுமா?

ராஜஸ்தான் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.

12:25 AM IST

தெலங்கானா - வெல்லப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்குமா?

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பிஆர்எஸ் 55 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 64 தொகுதிகள் வரையிலும், பாஜகவிற்கு 13, ஏஐஎம்ஐஎம்-முக்கு 7 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:24 AM IST

4 மாநில தேர்தல் முடிவுகள்

தற்போது ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளது.

12:23 AM IST

4  மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது

தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆகிய 4  மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.

11:30 PM IST:

ரிசர்வ் வங்கி இந்த வங்கியை மூடியது. வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு பணம் மட்டுமே கிடைக்கும். இதனைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

11:16 PM IST:

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

10:05 PM IST:

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 இந்தியாவில் டிசம்பர் 4 அன்று வெளியிடப்பட உள்ளது. இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

9:44 PM IST:

“அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்" என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

9:15 PM IST:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

8:59 PM IST:

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசாங்கம்  21 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் வீட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் குறைந்துள்ளது.

7:01 PM IST:

பஜாஜ் நிறுவனம் சேடக் அர்பேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

6:38 PM IST:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக 165 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 65 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதுதான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.

5:15 PM IST:

தெலங்கானாவில் காங்கிரஸ், ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து வெற்றி முகத்துக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இது ஆறுதல் வெற்றி என்று கூறப்படுகிறது.

5:00 PM IST:

இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

4:42 PM IST:

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு வெற்றியைப் பெற்று, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கத் தயாராக உள்ளது.

4:38 PM IST:

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது

3:30 PM IST:

தெலங்கானா மாநிலத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் தோல்விக்கு அக்கட்சியின் அதீத நம்பிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது

1:54 PM IST:

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ளது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

12:56 PM IST:

Chhattisgarh Election 2023 : மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தனது வெற்றியின் பாதி வழியைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

12:56 PM IST:

தெலங்கான மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிற்பகல் 1 மணிக்கு கட்சி தலைமை அலுவலகமான காந்தி பவனுக்கு மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி செல்கிறார்.

12:27 PM IST:

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்து முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

12:15 PM IST:

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது

11:45 AM IST:

சர்தார்புரா தொகுதியில் முதலமைச்சர் அசோக் கெலாட், டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் முன்னிலை பெற்றுள்ளனர். 

11:43 AM IST:

ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 67 இடங்களிலும், மற்ற கட்சிகள் 9 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், பாரத் ஆதிவாசி கட்சி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

11:20 AM IST:

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, ஆற்றல் வாய்ந்த ரேவந்த் ரெட்டியின் வியூகம் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது

11:15 AM IST:

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் பதான் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். 
பாஜக வேட்பாளர் விஜய் பாகேல் 5375 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

10:54 AM IST:

சத்தீஸ்கரின் 78 இடங்களின் நிலவரங்கள் வெளியான நிலையில் காங்கிரஸ் 43 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேசமயம் மற்ற ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.

10:46 AM IST:

ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 105 இடங்களை தாண்டி பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. அதேபோல், ஆளும் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பெற்றுள்ளது. 

10:43 AM IST:

மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. 136 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக. காங்கிரஸ் 89 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

10:32 AM IST:

சத்தீஸ்கரின் பதான் சட்டப்பேரவை தொகுதியில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் முன்னிலையில் உள்ளார்.

10:24 AM IST:

தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பெருபான்மைக்கு தேவையான 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் 35 இடங்களிலும், பாஜக 7 தொகுகளில், ஏஐஎம்ஐஎம் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  

10:07 AM IST:

ராஜஸ்தானில் டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் 1,173 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

10:05 AM IST:

தேர்தல் ஆணைய இணையதள தகவலின் மத்திய பிரதேசத்தில் பாஜக 148 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

9:57 AM IST:

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 130 இடங்களிலும், காங்கிரஸ் 96 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. களநிலவரத்தை பார்க்கும் போது மீண்டும் பாஜக ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது. 

9:46 AM IST:

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆட்சியமைக்கும் என அம்மாநில தலைவர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

9:46 AM IST:

தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பெருபான்மைக்கு தேவையான 60க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் 35 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 6 இடங்களிலும், பாஜக 5 தொகுகளில் மட்டும் முன்னிலை பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

9:31 AM IST:

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்

9:29 AM IST:

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்

9:28 AM IST:

தெலங்கானாவில் கரீம்நகர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய்குமார் முன்னிலை பெற்றுள்ளார். 

9:24 AM IST:

தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 66 இடங்களிலும், பிஆர்எஸ் 40 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

9:22 AM IST:

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

9:18 AM IST:

சிந்த்வாரா சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவை சேர்ந்த விவேக் புந்தி சாகு பின்னடைவை சந்தித்துள்ளார். 

9:15 AM IST:

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 219/230

பாஜக - 124

காங்கிரஸ் - 94

பகுஜன் - 00

மற்றவை - 01

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 109/119

காங்கிரஸ் - 62

பிஆர்எஸ் - 36

பாஜக - 05

மற்ற-06

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 195/199

பாஜக-104

காங்-86

பகுஜன்-00

மற்ற-05

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 86/90

காங்-44

பாஜக-41

ஜெசிசி-00

மற்ற-01

9:02 AM IST:

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 141/230

பாஜக - 83

காங்கிரஸ் - 58

பகுஜன் - 0 

மற்றவை - 0

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 71/119

காங்கிரஸ் - 40

பிஆர்எஸ் - 26

பாஜக - 05

மற்ற-00

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 170/199

பாஜக-99

காங்-72

பகுஜன்-00

மற்ற-02

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 78/90

காங்-44

பாஜக-34

ஜெசிசி-00

மற்ற-00

9:01 AM IST:

சத்தீஸ்கரில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் விறு விறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 46 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

8:52 AM IST:

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறது.  தற்போது பாஜக 91 இடங்களிலும், 88 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

8:50 AM IST:

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் தங்களது தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

8:46 AM IST:

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தெலங்கானா - காங்கிரஸ்
மத்தியப் பிரதேசம்  -காங்கிரஸ்
ராஜஸ்தான்: காங்கிரஸ் - பாஜக கடும் போட்டி
சத்தீஸ்கர்  -காங்கிரஸ்

8:45 AM IST:

நான்கு மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன

8:43 AM IST:

சத்தீஸ்கரில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் விறு விறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் 48 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

8:40 AM IST:

தெலங்கானாவில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 45 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியும், பிஆர்எஸ் கட்சி 25 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

8:25 AM IST:

சத்தீஸ்கரில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 38 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியும், பாஜக 24 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

8:21 AM IST:

சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

8:20 AM IST:

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜக 45 இடங்களிலும், 46 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

8:18 AM IST:

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது பாஜக 16 இடங்களிலும், 14 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

8:05 AM IST:

 ராஜஸ்தானில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 33 மாவட்டங்களில் 36 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

8:01 AM IST:

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

7:51 AM IST:

மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, சர்குஜாவில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையை வாக்கு எண்ணும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

7:41 AM IST:

4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. யார் ஆட்சியை தக்கவைப்பார்கள்.? யார் ஆட்சியை பிடிப்பார்கள்  என நாடே ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளது.

7:19 AM IST:

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 

6:56 AM IST:

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

6:22 AM IST:

 சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  இந்த 4 மாநிலங்களில் முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிந்து விடும். எந்த கட்சி ஆட்சியை அமைக்கும் என்பது பிற்பகலில் உறுதியாவிடும். 

12:30 AM IST:

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கலாம் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜன் கி பாத், ரிபப்ளிக், டிவி 9 , பி-மார்க் நடத்திய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:28 AM IST:

சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் உள்ள காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெரும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

12:27 AM IST:

ராஜஸ்தான் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.

12:25 AM IST:

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பிஆர்எஸ் 55 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் 64 தொகுதிகள் வரையிலும், பாஜகவிற்கு 13, ஏஐஎம்ஐஎம்-முக்கு 7 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:24 AM IST:

தற்போது ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளது.

12:23 AM IST: