மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் இருந்து 210 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் தொடர்ந்து வடக்கு - வட மேற்கு திசையில் நகர்கிறது. நாளை முற்பகல் வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரையில் நிலைகொண்டு, கரைக்கு இணையாக வடக்கு திசையில் நகர்ந்து, நெல்லூர் - மசூலிப்பட்டணத்திற்கு இடையே டிசம்பர் 5ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்க கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மிக்ஜாம் புயல் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னைக்கு அருகே 150 கி.மீ முதல் 175 கி.மீ வரை மிக்ஜாம் புயல் வரலாம். நாளை இரவு வரை சென்னையில் கனமழை பெய்யக்கூடும்” என்று கூறினார்.இந்த நிலையில் மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
புயலை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்போது பேசிய அவர், “மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 225 வீரர்கள் தயாராக உள்ளனர். மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
24 மணி நேரமும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. புயலின் போது மரங்கள், மின்கம்பங்கள் கீழே விழும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். புயல் காரணமாக அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 1000 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நாளை முடிந்தவரை வீட்டில் இருந்தே பணியாற்ற வைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா
