“பை பை கே.சி.ஆர்”.. தெலங்கானாவில் மண்ணை கவ்விய கே.சி.ஆர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
தெலங்கானாவில் காங்கிரஸ், ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து வெற்றி முகத்துக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இது ஆறுதல் வெற்றி என்று கூறப்படுகிறது.
மிசோரம் மாநிலத்தை தவிற மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தெலங்கானாவை தவிர மற்ற 3 மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ்-இல் “பை பை கே.சி.ஆர்” என்று நெட்டிசன்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா ப்ராஜெக்ஷன் உட்பட சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸின் சாதகத்தை எதிரொலித்தாலும், கட்சி மீண்டும் வரக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தெலங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
2014 தேர்தலில், அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) 63 இடங்களுடன் குறுகிய வெற்றியைப் பெற்றது. பெரும்பான்மையை மிஞ்சியது. இருப்பினும், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 12 எம்எல்ஏக்களையும், காங்கிரஸிலிருந்து 8 எம்எல்ஏக்களையும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யின் மூன்று, பி.எஸ்.பி-யின் இரண்டு, சி.பி.ஐ-யில் இருந்து ஒரு, மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ-க்களையும் இழுத்து தனது ஆதரவை விரைவாக விரிவுபடுத்தினார்.
119 இடங்களில் 88 இடங்களை பி.ஆர்.எஸ் கைப்பற்றிய போதிலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதில் ஈடுபட்டதால், 2018 தேர்தல்களில் இதேபோன்ற சம்பவம் வெளிப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேரை, இரண்டு தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சுயேட்சைகளுடன் சேர்த்து, அவர்கள் தங்கள் நிலையை மேலும் உறுதிப்படுத்தினர். தெலுங்கானாவில் தேர்தல் முடிவுகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் மற்றும் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா