‘ஜன் தன்’ திட்டத்தின் கீழ் நாட்டில் 35 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலமாக வங்கிகளில் ரூ. 65 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி (மன் கி பாத்) உரையை நேற்று ஆற்றினார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் ‘ஜன் தன் யோஜனா’, ஜீவன் ஜோதி பீமா, சுரக்‌ஷா மீபா போன்ற காப்பீட்டு திட்டங்களின் மூலமாகவும், ரூபே அட்டை, முத்ரா திட்டத்தின் கீழும் நாட்டு மக்கள் பலன் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வங்கிகள் ஆய்வு மேற்கொண்டன. குறிப்பாக ஜீவன் ஜோதி பீமா, சுரக்‌ஷா பீமா திட்டங்களில் பிரீமியம் தொகையாக ரூ. 1 அல்லது ரூ. 30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது ஏழை மக்களுக்கு

நாளை (இன்று) ஜன் தன் திட்டமான தனது 3-வது ஆண்டை நிறைவு செய்கிறது. நாங்கள் ஒரு லட்சியத்துடன் இந்த திட்டத்தை ஆரம்பித்தோம். இந்த திட்டமானது நாட்டில் உள்ளப பெருளாதார வல்லுனர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச வல்லுனர்களாலும் தீர ஆய்வு செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 30 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் இணைந்து வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் தொகையை காட்டிலும் அதிகம். ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிகளில் ரூ. 65 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகை ஏழைகளுக்கு சேமிப்பாக அமையும். அவர்களது வருங் கால தேவைகளுக்கு உதவும். ஜன்தன் திட்டத்தால் கடைக்கோடி மனிதர்களும் (ஏழை மக்களும்) நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்கின்றனர். வங்கியில் தான் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் தனது பிள்ளைகளுக்கு பயன்படும் என்பதை ஏழைகள் உணர்ந்துள்ளது.

ஏழை ஒருவரின் சட்டைப் பையில் ‘ரூபே’ அட்டை இருக்கும்போது, மற்றவர்களால் தான் மதிக்கப்படுவதை போன்று உணர்கிறார். ஒரு ரூபாய் காப்பீட்டு மூலமாக குடும்பத் தலைவர் உயிழந்து விட்டால் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் கிடைக்கிறது. முத்ரா திட்டத்தின்கீழ் எந்த வித உத்தரவாதமும் வழங்காமல் லட்சக்கணக்கானோர் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அதன் மூலமாக அவர்கள் சொந்தக் காலில் நிற்கின்றனர்.