சிறுமி ஒருவர் தொடர்ந்து பல முறை பலாத்காரம் செய்யப்பட்டு பின் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததை அடுத்து அந்த கருவை பையில் கொண்டு வந்து போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சாத்னா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சானா 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சானாவை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பள்ளி விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த சமயத்தில்  நீரஜ் பாண்டே மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை கத்தி முனையில் கற்ப்பழித்துள்ளனர். பின்னரும் அந்த சிறுமியை விடாமல் பல முறை கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார் சானா ஆனால்  போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அந்த சிறுமிக்கு வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதை அடுத்து அவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சிறுமிக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதால் ஆட்டோவில் தனது தாயுடன் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு வழிமறித்த சிறுமியை கற்பழித்த நீரஜ் பாண்டே மற்றும் நண்பர்கள் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.  அங்கு அந்த சிறுமி சானாவுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது.

பின்னர் கலைக்கப்பட்ட கருவை ஒரு பையில் போட்டு ஆட்டோவுக்கும் ரூ. 20-ஐ கொடுத்த மருத்துவர், கருவை கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிடு இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்த பெண் மருத்துவர் சானாவை மிரட்டி துரத்தி அனுப்பியிருக்கிறார்.

இதையடுத்து சாத்னாவில் உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பையில் போட்டுக் கொடுக்கப்பட்ட கருவுடன் சென்று புகார் அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிறுமியை தொடர்ந்து கற்பழித்து கருகலைப்பு செய்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.