தூக்கத்தில் ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் என்ன? எப்படி தடுப்பது?

இதய நோயால் ஆண்டுதோறும் பலர் இறக்கின்றனர். மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு காரணம். அதனால்தான் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. 

World Heart day 2023.. why heart attack happens while sleeping know symtoms and prevention tips Rya

ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதித்து வருகிறது. சமீபகாலமாக இளைஞர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் மரணத்திற்கு மாரடைப்பு தான் முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இதய நோய்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நம் இதயம் சரியாக இருக்க வேண்டும். இதயம் நமது முழு உடலுக்கும் இரத்தத்தை வழங்குகிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நம் இதயத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது.

இதய நோயால் ஆண்டுதோறும் பலர் இறக்கின்றனர். மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு காரணம். அதனால்தான் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. 

வயதானவர்கள் மட்டுமின்றி, தற்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது. நடனமாடும்போதும், விளையாடும்போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் மாரடைப்பு ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் ம்பவங்களை செய்திகளில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதுபோன்ற மாரடைப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் வலம் வருகின்றன. மேலும், தூங்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே மாரடைப்புக்கான காரணங்கள் என்ன? இப்போது தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்வோம்..

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இதயத்தின் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படுவது. அதிகளவில் கொலஸ்ட்டால் சேர்வது, இரண்டாவது இரத்தம் உறைதல் காரணமாக இதய பாதிப்பு ஏற்படுகிறது. சுறுசுறுப்பாக இருக்கும் போது அல்லது வேலை செய்யும் போது மட்டும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தூங்கும் போதும் ரத்தம் உறைகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் மற்ற செயல்களைச் செய்யும்போது மாரடைப்பும் வரலாம். மாரடைப்புக்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது தெரிந்து கொள்வோம்..

மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்கள்:

  •  உயர் இரத்த அழுத்தம்
  • கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தது
  • அதிக சர்க்கரை அளவு
  • உடல் செயல்பாடு இல்லாதது
  • அதிக எடை
  • மன அழுத்தம்

மாரடைப்பு ஏற்படும் போது மார்பில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. மார்பின் இடது பக்கத்தில் மட்டுமே வலி இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் மாரடைப்பு வலி மார்பில் மட்டுமல்லாமல், நம் தாடை முதல் தொப்புள் வரை எங்கும் வரலாம். ஆனால் இந்த வலி நம் தோள்கள், கைகள் மற்றும் மேல் முதுகில் மட்டும் பரவுகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள் என்னென்ன?

  • நெஞ்சு வலி
  • மூச்சு திணறல்
  • கவலை
  • இதயத் துடிப்பு அதிகரிப்பு
  • மயக்கம்
  • பேசுவதில் சிரமம்
  • அதிக வியர்வை

தண்ணீர் குடிப்பதால் இதய நோய்களை தடுக்க முடியும்.. எப்படி தெரியுமா? நிபுணர் சொன்ன ஆச்சர்ய தகவல்..

மாரடைப்பு தடுப்பு குறிப்புகள்

  • எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்
  • வழக்கமான சுகாதார பரிசோதனைகள்
  • வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம்
  • சமச்சீரான ஆரோக்கிய உணவு அவசியம்
  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios