'வாம்பயர் ஃபேஷியல்' செய்த பெண்களுக்கு HIV பாதிப்பு.. அமெரிக்க நோய் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவல்..
ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு HIV பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு HIV பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒப்பனை ஊசி மூலம் ஹெ.ஐ.வி பரவுவது இதுவே முதன்முறை. நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒரு ஸ்பாவில் 'வாம்பயர் ஃபேஷியல்' என்று அழைக்கப்படும் ஒப்பனை சிகிச்சை செய்து கொண்ட போது மூன்று பெண்கள் ஆபத்தான ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், அல்புகெர்கியில் உள்ள விஐபி ஸ்பாவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒரு நடுத்தர வயது பெண்ணுக்கு ஹெச்.ஐ. வி பாதிப்பு உறுதியானது. ஆனால் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் பழக்கம் எதுவும் இல்லை என்றும், ஹெச்.ஐ.வி உள்ள ஒருவருடன் பாலியல் தொடர்பு அல்லது சமீபத்தில் இரத்தம் ஏற்றப்பட்டது போன்ற எந்த வரலாறும் இல்லை. ஆனால் அவர் வேம்பயர் ஃபேசியல் சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
Beauty Tips : வயதானாலும் முகத்தில் சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்க பெஸ்ட் ஃபேஸ் பேக் இதுதான்!
இதை தொடர்ந்து நியூ மெக்சிகோ சுகாதாரத் துறையை, அந்த குறிப்பிட்ட ஸ்பாவில் ஊசி போட்ட அனைவருக்கும் இலவச ஹெச்ஐவி பரிசோதனையை மேற்கொண்டது. பின்னர் அந்த ஸ்பாவில் "இரத்தம் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை பரப்பக்கூடிய நடைமுறைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த ஸ்பா முடப்பட்டது.
இப்போது, ஸ்பா செயல்படுவதற்கு உரிய உரிமம் இல்லை என்பதை அமெரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நோய் தடுப்பு மையம் மற்றும் நியூ மெக்ஸிகோ சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து அந்த ஸ்பாவில் ஆய்வு செய்தன. அப்போது, அந்த ஸ்பா சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது.
அந்த ஆய்வில் அதிகாரிகள் உள்ளூர் மயக்க மருந்து போன்ற ஊசி மருந்துகளை லேபிளிடப்படாத இரத்தக் குழாய்களைக் கண்டுபிடித்தனர். அந்த ஸ்பாவின் பல இடங்களில் குறிப்பாக, கவுண்டர்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் மூடப்படாத சிரிஞ்ச்கள் காணப்பட்டன.
அந்த பெண் மட்டுமின்றி, மேலும் இரண்டு நடுத்தர வயது பெண்களுக்கு 2019 மற்றும் 2023 இல் ஹெச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டது. 2018 இல் ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்த மற்றொரு பெண்ணும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங், சிங்கப்பூரில் பிரபல MDH, எவரெஸ்ட் மசாலா பொருட்களுக்கு தடை.. ஏன் தெரியுமா?
அமெரிக்க நோய் தடுப்பு மையம் மற்றும் சுகாதாரத் துறை விசாரணையில் 59 ஸ்பா வாடிக்கையாளர்கள் ஸ்பாவில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இதில், 20 பேர் வாம்பயர் ஸ்பாவைப் பெற்றனர், மீதமுள்ளவர்கள் சுருக்கங்களை நீக்கும் சிகிச்சை போன்ற சேவைகளுக்காக ஊசிகளைப் பெற்றனர். இருப்பினும், அதிகாரிகளின் கூற்றுப்படி, ஸ்பாவில் ஹெச்ஐவி தொற்றின் அசல் ஆதாரம் தெரியவில்லை.
2022 ஆம் ஆண்டில் விஐபி ஸ்பாவின் உரிமையாளர்கள் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்ததாக தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..
வாம்பயர் ஃபேஷியல் என்றால் என்ன?
வாம்பயர் ஃபேஷியல் என்று அழைக்கப்படுபவை சமீபகாலமாக உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள. இந்த சிகிச்சை முகத்தில் இருக்கும் முகப்பரு வடுக்கள் அல்லது சுருக்கங்கள் தோற்றத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. இரத்தத்தை வெளியே எடுப்பதுடன்,, பிளாஸ்மாவைப் பிரிப்பது மற்றும் சிறிய ஊசிகளைப் பயன்படுத்தி முகத்தில் செலுத்துவது ஆகியவை செயல்முறையாகும். ரத்தம் சரியாக கையாளப்படும் வரை வாம்பயர் ஃபேஷியல் பாதுகாப்பாக இருக்கும் என்றாலும் அது ஆபத்தானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றன.