Banana: இரவு உணவுக்குப் பிறகு ஏன் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்? தெரியுமா உங்களுக்கு?

உணவு சாப்பிட்டு முடித்தவுடன், சிலருக்கு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இது ஏன் என்று இன்றளவும் பலருக்கும் தெரியாது. ஆனால், இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளதாம். அந்த காரணம் என்ன என்பதை நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.
 

Why eat banana after dinner? Do you know?

உணவு சாப்பிட்டு முடித்தவுடன், சிலருக்கு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இது ஏன் என்று இன்றளவும் பலருக்கும் தெரியாது. ஆனால், இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளதாம். அந்த காரணம் என்ன என்பதை நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் நம் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. தினசரி ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வதால், நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் கொடுக்கிறது. நன்றாக பழுத்த வாழைப்பழத்தை இரவு உணவுக்குப் பிறகு, ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் இருக்கும் நிக்கோட்டினை வெளியேற்ற உதவி புரிவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கிறது.

வாழைப்பழத்தின் நன்மைகள்

தினநதோறும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறுகளில் ஒன்றான நாள்பட்ட அல்சர்  பிரச்சனையை மிக எளிதில் குணப்படுத்தலாம். குறிப்பாக நன்றாக கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அழற்சியும் குணமாகும்.

அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் மற்றும் மூல நோய் பாதிப்பு குறைந்து விடும்.

உணவு சாப்பிட்ட பின், வாழைப்பழத்தின் தோலை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதன் மீது ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் உப்பு தூவி சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுவது மட்டுமன்றி, மலச்சிக்கலை குணப்படுத்தும். இது தவிர, வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. உடலில் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வாழைப்பழம் உதவுகிறது. 

இந்த வார சண்டேக்கு கிரில்டு இறால் ரெசிபியை செய்யலாம் வாங்க!

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. அனைவருக்கும் சரியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியும் தேவை. உட்கார்ந்த வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை அல்லது இடையூறு தூக்கம் போன்றவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.    

யாரெல்லாம் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்?

ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சளி தொந்தரவு உள்ளவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில், இவர்கள் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடுவதால், தூக்கம் கெடுவதோடு சளிப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios