Asianet News TamilAsianet News Tamil

இந்த வார சண்டேக்கு கிரில்டு இறால் ரெசிபியை செய்யலாம் வாங்க!

வாருங்கள்! டேஸ்ட்டான கிரில்டு இறால் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Grilled Prawn in Tamil
Author
First Published Jan 21, 2023, 3:08 PM IST

அசைவ மற்றும் கடல் உணவான இறாலானது ஒரு தனித்துவமான சுவையை கொண்டு இருக்கும். இதனை குழந்தைகள்,இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவு வகை ஆகும்.

இறால் வைத்து கிரேவி, இறால் தொக்கு, இறால் ஃப்ரை என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் இறால் வைத்து வீட்டிலேயே டேஸ்ட்டான கிரில்டு இறால் ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் போன்றவற்றிற்கு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். இதனை ஒரு முறை செய்து கொடுங்கள்.பின் இதனை அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள்.

வாருங்கள்! டேஸ்ட்டான கிரில்டு இறால் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

  • இறால் - 1/2 கிலோ
  • பூண்டு - 4 பற்கள்
  • அரைத்த மிளகு - 1 ஸ்பூன்
  • லெமன் ஜூஸ்-1/2 ஸ்பூன்
  • மல்லித்தழை - கையளவு
  • உப்பு - தேவையான அளவு
  • ஆலிவ் ஆயில் - தேவையான அளவு

       டேஸ்ட்டான பன்னீர் கீர் செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழை மற்றும் பூண்டு பற்களை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகினை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது இறாலில் பொடியாக அரிந்த பூண்டு ,ஆலிவ் எண்ணெய், லெமன் ஜூஸ்,பொடித்து வைத்துள்ள மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டி வைத்து கிட்டதட்ட 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

இப்போது கிரில்லை சூடாக்கி கொண்டு சுத்தம் செய்து வைத்துள்ள இறால்களை ஒரே லேயராக வைத்து ஒரு விலாசமான ஓவன்- ப்ரூப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். க்ரில்லின் கீழ் பாத்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இறாலின் ஒரு பக்கத்தை சுமார் 3 நிமிடங்கள் வரை கிரில் செய்து விட வேண்டும்.

 பின் பாத்திரத்தை வெளியே எடுத்துக் கொண்டு இறால்களைத் மறுபுறம் திருப்பி 3 நிமிடங்கள் வரை கிரில் செய்ய வேண்டும். இறுதியாக பொடியாக அரிந்த மல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி! நீங்களும் ஒரு முறை இதனை செய்து பார்த்து உங்கள் குடும்பத்துடன் சுவைத்து மகிழுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios