Paneer Kheer : டேஸ்ட்டான பன்னீர் கீர் செய்யலாம் வாங்க!
வாருங்கள்! ருசியான பன்னீர் கீர் எப்படி செய்யலாம் என்பதை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அனைவரும் விரும்பி சாப்பிடுகின்ற உணவு வகைகளில் பன்னீரும் ஒன்று. பன்னீர் சேர்த்து செய்யப்படும் அனைத்து ரெசிப்பிகளும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிட்டாலும் குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பன்னீர் சேர்த்து மசாலா, கிரேவி, தோசை, மன்ச்சூரியன் என்று இன்னும் பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் சேர்த்து சுவையான கீர் ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இதன் ருசி இருக்கும்.
இனி வீட்டின் விஷேங்களுக்கு இந்த பன்னீர் கீர் தான் செய்ய வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் அளவிற்கு இதன் சுவை சூப்பராக இருக்கும்.
வாருங்கள்! ருசியான பன்னீர் கீர் எப்படி செய்யலாம் என்பதை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1/2 கப்
காய்ச்சிய பால் - 3/4 கப்
பால் - 1/2 லிட்டர்
நெய்-2 ஸ்பூன்
முந்திரி பருப்பு-10
பாதாம் பருப்பு -10
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 3
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
முதலில் பன்னீரை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து பால் ஊற்றி, தண்ணீர் சேர்க்காமல் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்பினை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடித்து தூள் போன்று செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து கடாய் சூடான் பின்பு, துருவிய பன்னீர் சேர்த்துக் கொண்டு அதில் காய்ச்சாத பால் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். பின் இதில் சுண்டக் காய்ச்சிய பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் மீண்டும் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.
பின் இதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விட்டு, நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளற வேண்டும். பின் இதனை மற்றொரு பாத்திரத்தில் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து, நெய் உருகிய பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த முந்திரி, திராட்சை ,பொடித்து வைத்துள்ள பாதாம் பருப்பு மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை தூவி விட வேண்டும். அவ்ளோதான் ருசியான பன்னீர் கீர் ரெடி!! நீங்களும் இதனை ஒரு முறை செய்து பார்த்து அசத்துங்க