ஆண்களை விட பெண்களுக்கு தான் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளன. அதற்கான காரணங்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Why are women more at risk of stroke than men? : உலகின் ஏதாவது ஒரு பகுதியில் யாராவது ஒருவர் ஒவ்வொரு வினாடிக்கும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதம் தான் உலகளவில் இறப்புக்கான முன்னணி மற்றும் இரண்டாவது பெரிய காரணியாகும்.

பக்கவாதம் என்றாலே ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் தவறு. உண்மையில் உலகின் பக்கவாதத்தால் 10 பேர் பாதிக்கப்பட்டாலும், அதில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், உலகளவில் பெண்களின் மரணத்திற்கு பக்கவாதம் மூன்றாவது முக்கிய காரணம். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகம் உள்ளன ஆராய்ச்சி சொல்லுகின்றது. ஆண்களை விட பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை எண் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்களை விட பெண்களுக்கு பக்கவாதம் அதிகம் வர காரணம் என்ன?

1. நீண்ட ஆயுட்காலம்..

ஆண்களை விட பெண்கள்தான் நீண்ட ஆயுட்காலம் வாழ்கிறார்கள். இதன் காரணமாக தான் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளன.

2. ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள்..

- கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் நின்று போதல் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் ஆகியவற்றின் பயன்பாட்டின் காரணமாக தான் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம்.

- அதுபோல மாதவிடாய் நின்ற பிறகும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால் பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கும்.

3. கர்ப்ப காலம்..

கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பது, ரத்தம் உறைதல் காரணிகள் அதிகரிப்பது, பிரசவத்திற்கு பிறகு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

4. பிற காரணங்கள்..

- உயர் ரத்த அழுத்தம், இது என் பிரச்சனைகள் மூட்டு வலி அதிகப்படியான கொழுப்பு ஆகியவை பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கும்.

- ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகியவை ஆண்களை விட பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

- ஒளியுடன் கூடிய ஒற்றைத் தலைவலிகள் பெண்களுக்கு அதிக பக்கவாதம் அபாயம் உள்ளன.

- லூபஸ் போன்று சில நோய்கள் தாக்கத்தின் காரணமாக பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

- ஒரு பெண் நோய்வாய்ப்படும்போது சரியான நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளன.

பக்கவாத அறிகுறிகள்..

வழக்கத்திற்கு மாறாக திடீர் சோர்வு அல்லது பலவீனம் ஏற்பட்டால் அது பக்கவாத அறிகுறியாகும்.