Chia Seeds: சியா விதைகளை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது: எப்போது சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!
சியா விதைகளின் நன்மைகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். சியா விதைகளை தினமும் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
பண்டைய கால உணவு முறையை ஒப்பிட்டால், தற்கால உணவு முறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றங்கள் நன்மையைத் தந்தால் ஏற்றுக்கொள்வதில் நமக்கு பிரச்சனையே இல்லை. ஆனால், இன்றைய உணவு முறை நம் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது. இதனால், பலரும் பலவித நோய்களுக்கு ஆளாகும் நிலைமை உருவாகி உள்ளது. இருப்பினும், நம் உடல் நலத்தை மீட்டெடுக்க இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது தான் மிகவும் சிறந்த வழியாகும். அப்படிப்பட்ட இயற்கையில் சியா விதைகளின் நன்மைகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். சியா விதைகளை தினமும் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், இவ்விதைகளை எப்படி, எப்போது, யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சியா விதைகள்:
சியா விதைகளில் பல நன்மைகள் இருந்தாலும், நார்ச்சத்து அதிகம் இருப்பதால் தினமும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதை தெரிந்து கொண்டாலே நமக்கு பாதி சத்துக்கள் கிடைத்தது மாதிரி தான். இந்த விதையில் நார்ச்சத்து, ஒமேகா- 3 பேட்டி ஆசிட் மற்றும் கால்சியம் போன்றவை இருக்கிறது.
நார்ச்சத்து மிகுந்த சியா விதைகள்:
சியா விதையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தவிர்க்க உதவி புரிகிறது. இந்த நிலையில் இதுபோன்ற அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை, நாம் தினமும் சாப்பிட வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் தவறான செயல் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற அதிகளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் நாம் சாப்பிடும் போது செரிமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Lose Belly: தொப்பையை குறைக்க 10 நாட்கள் போதும்: ஜப்பானிய டெக்னிக் சொல்வது சாத்தியமா?
நார்ச்சத்து மற்றும் மற்ற சத்துக்கள் நிறைந்த இதுபோன்ற உணவுகளை ஒரு வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த உணவை எடுத்துக் கொள்ளும் போது, சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- சியா விதைகளை சாப்பிடும்போது, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- ஒருவேளை உங்களுக்கு சியா விதைகளை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு விட்டால், சாப்பிடுவதை உடனே நிறுத்தி விட வேண்டும்.
- வயிறு உப்பசமாக இருந்தாலும், இந்த விதைகளை சாப்பிட வேண்டாம்.
- தினந்தோறும் சியா விதைகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.