Lose Belly: தொப்பையை குறைக்க 10 நாட்கள் போதும்: ஜப்பானிய டெக்னிக் சொல்வது சாத்தியமா?
ஜாப்னிஸ் டவல் எக்ஸர்சைஸ் என்ற உடற்பயிற்சி. இது, 10 நாட்களில் விரும்பிய பலனை தருகிறது என சமூக வலைத்தளங்களில், பகிரப்படும் போஸ்ட்களில் இருக்கிறது. இருப்பினும் இது உண்மையா என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உடலை கட்டுக்கோப்பாகவும், கொழுப்பு சதை இல்லாமலும் வைத்திருக்கத் தான் பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், இங்கு பலருக்கும் தொப்பைதொ ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தொப்பையை குறைக்க பலரும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் டயட் என பலவிதங்களில் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அடிவயிற்றில் உள்ள கொழுப்பை அவ்வளவு சீக்கிரம் கரைத்து விட முடியாது. இருப்பினும், 10 நாட்களுக்குள் அடிவயிற்றை நம் விருப்பப்படி மாற்றும் ஒரு உடற்பயிற்சி இருக்கிறது. ஆம், உண்மைதான். தொப்பையை கரைத்து, வயிற்றுப் பகுதியை ஃபிட்டாக வைக்க உதவி செய்கிறது, ஜாப்னிஸ் டவல் எக்ஸர்சைஸ் என்ற உடற்பயிற்சி. இது, 10 நாட்களில் விரும்பிய பலனை தருகிறது என சமூக வலைத்தளங்களில், பகிரப்படும் போஸ்ட்களில் இருக்கிறது. இருப்பினும் இது உண்மையா என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஜாப்பனிஸ் டவல் ஒர்கவுட்
உடலை கட்டமைக்க ஜாப்பனிஸ் ரிஃப்ளெக்சாலஜி மற்றும் மசாஜ் நிபுணர் டாக்டர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸி என்பவரால் சில வருடங்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது தான் ஜாப்பனிஸ் டவல் ஒர்கவுட். இந்த உடற்பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் கூடுதல் கொழுப்பை குறைக்க முடியும். அதிலும் சிறப்பாக இது, தொப்பையை குறைக்கவும், முதுகை வலுப்படுத்தவும் மற்றும் முதுகுவலியை குறைக்கவும் உதவுகிறது என கூறி இருக்கிறார் ஜப்பானிய டாக்டர்.
ஜாப்பனிஸ் டவல் ஒர்கவுட் செய்யும் முறை
ஜாப்னிஸ் டவல் உடற்பயிற்சியை செய்ய, ஒரு மேட் மற்றும் டவலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மேட்டை விரித்து, அதில் கை மற்றும் கால்களை நன்றாக நீட்டி, ஸ்ட்ரெச் செய்தபடி படுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு டவலை எடுத்து, அதனை மடித்து முதுகிற்கு கீழ் பக்கம், அதாவது தொப்புளுக்கு கீழே இருக்கும்படி வைக்க வேண்டும்.
பின் கால்களை தோள்பட்டை அகலத்திற்கு விரித்து வைத்து, இரண்டு கால்களின் பெருவிரல்கள் ஒன்றையொன்று தொடும்படி செய்ய வேண்டும்.
பின்னர் கைகளை தலைக்கு மேலாக கொண்டு வந்து, உள்ளங்கைகள் தரையை பார்க்கும்படி வைத்து, கைகள் இரண்டையும் நீட்ட வேண்டும்.
ஏறக்குறைய 5 நிமிடங்கள் இந்த பொசிஷனில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த உடற்பயிற்சியை முடிக்கும் போது சட்டென எழுந்து விடக்கூடாது. உடலை படிப்படியாகத் தான் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
தொடர்ச்சியாக 10 நாட்கள் இந்த உடற்பயிற்சியை செய்து வந்தாலே, இடுப்பை சுற்றியிருக்கும் கொழுப்பு மற்றும் தொப்பை வெகு விரைவில் குறையும் என கூறப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம், இடுப்பு எலும்புகளை சரிசெய்வதனால், உடல் எடையை வெகு விரைவாக குறைக்க முடியும் என்பது டாக்டர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸியின் வாதமாக உள்ள நிலையில், சில நிபுணர்கள் மட்டும் இதனை ஏற்க மறுக்கின்றனர்.
உண்மையில், எந்தவொரு உடற்பயிற்சியும் இந்த அளவிற்கு விரைவான முடிவுகளைத் தர முடியாது. இது ஒருபுறம் இருந்தாலும், இந்த உடற்பயிற்சி முதுகுவலியை குறைக்க மற்றும் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க சிறிதளவே உதவும் என்கிறார்கள் சில அமெரிக்க நிபுணர்கள்.