நாக்கில் வெள்ளைப் பூச்சு காணப்பட்டால் குடல் ஆரோக்கியத்தை கவனிப்பது முக்கியம்..!!
நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சி எடுத்து, உடல் உறுப்புகளுக்க் விநியோகம் செய்வதைல் குடல் பெரும் பங்கு வகிக்கிறது. குடலின் செயல்பாட்டில் பிரச்னை இருந்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாயில் புண் உள்ளிட்ட பிரச்னைகள் தோன்றும். அடிக்கடி இதுபோன்ற தொந்தரவு ஏற்பட்டால் அலட்சியம் கூடாது. உடனடியாக மருத்துவரை சந்தித்து தீர்வு காண வேண்டும். குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் உடல் சோர்வு, எடை இழப்பு, பசியின்மை மற்றும் சோம்பல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இது அறிகுறிகள் மட்டுமே. இதுபோன்ற பிரச்னைகள் சாதாரணமாக தோன்றினாலும், நாள்பட வளர்சிதை மாற்றத்துக்கு வழிவகுக்கும். வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டால், உடலின் செயல்பாடு சமநிலையற்று போய்விடும். உங்கள் நாக்கில் வெள்ளையாக மாவு படிந்திருந்தால் அது குடல் ஆரோக்கியத்தின் மோசமான நிலையை உருவாக்கலாம். இதுகுறித்து விரிவாக தகவல்களை அடுத்தடுத்து பார்க்கலாம்.
ஆயுர்வேதம் சொல்வது என்னவென்றால்
உங்கள் செரிமான அமைப்பு அதிகமாக வேலை செய்வதால், நாக்கின் மீது வெள்ளையாக மாவு ஏற்படும். இதன் விளைவாக நாக்கில் கேண்டிடா, ஈஸ்ட் அல்லது பாக்டீரியா போன்றவை குவியத் துவங்கும். இதன்வழியாக உணவை சாப்பிடும் போது, நுண்கிருமிகள் செரிமான மண்டலத்துக்கு சென்றுவிடுகிறது. இதன்காரணமாக உங்களுடைய செரிமான அமைப்பு சரியாக செயல்படாமல் போய்விடும். அதனால் குடல் ஆரோக்கியம் தடைபட்டு, வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
Water Poori : தண்ணீரில் பூரி சுடலாம் வாங்க! - ஆரோக்கியமாக சாப்பிடலாம் வாங்க!
அடிக்கடி உணவு சாப்பிடக் கூடாது
உடலில் அதிகளவு செரிமானம் நடப்பதால், நாக்கில் வெள்ளை மாவு படிகிறது. அதை தடுக்க அடிக்கடி உணவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிட்டவுடன், அது செரிமானம் அடைய வயிற்றுக்கு நேரம் கொடுக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு பசி எடுக்கும், மறுபடியும் உணவு சாப்பிடலாம். இது தொடரும் பட்சத்தில் நாக்கில் படிந்துள்ள வெள்ளை மாவு அகன்றுவிடும்.
வயிற்றுப் பிரச்னைகள்
மோசமான குடல் ஆரோக்கியத்துக்கு உடலில் இருப்பில் இருக்கும் அமிலத்தன்மை, நெஞ்சரிச்சல் மற்றும் வயிற்று தசைப் பிடிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதுபோன்ற பிரச்னைக்கு ஆளாகுபவர்கள் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.
Almond Milk : ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பாதாம் பால் டீ, காஃபி தயாரிப்பது எப்படி?
மலச்சிக்கல்
அடிக்கடி சாப்பிடவுடன் கழிவறைக்கு செல்வது, பிரியாணி உள்ளிட்ட காரமான உணவுகளை சாப்பிடவுடன் மலம் கழிப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால், அது மலச்சிக்கலை குறிக்கிறது. இதுவும் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வருவதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மலச்சிக்கல் பாதிப்பு கொண்டவர்கள், நார்ச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். பீன்ஸ், பீட்ரூட், தானிய உணவுகள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது நல்ல பலனை தரும். வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு பெரிதும் உதவும்.
பசிக்கும் போது சாப்பாடு
மேற்கூரிய அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், மருத்துவரை அணுகுவதற்கு முன்பு சில வழிமுறைகளை பின்பற்றிப் பாருங்கள். பசிக்கும் போது சாப்பிடுங்கள், தேவையற்ற உணவுப் பழக்கங்களை கைவிடுங்கள், காரமான உணவுகளை தவிர்த்திடுங்கள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு பத்தியத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த வழிமுறைகளை பின்பற்றும் போது, உங்கள் உடலில் அமைதியான சூழல் ஏற்பட்டால், இதே உணவுப் பழக்கத்தை பின்பற்றுங்கள். எனினும் தொடர்ந்து பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்ல பலனை தரும்.
Egg Cutlet : குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தி ஸ்நாக்ஸ் ''முட்டை கட்லட்''!
இயற்கையான முறையில் தயாரான உணவுகள் எப்போதும் ஆரோக்கியம் நிறைந்ததாகவே உள்ளது. துரித உணவுப் பழக்கங்கள், குளிர்ந்த உணவு வகைகள் மற்றும் பதப்படுத்தபப்ட்ட உணவு வகைகள் போன்றவை ஆரோக்கியத்துக்கு அதிகளவில் பாதிப்பை தருவதாக உள்ளன. எந்த உணவை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்கிற வரைமுறை உள்ளது. அதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.