MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Almond Milk : ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பாதாம் பால் டீ, காஃபி தயாரிப்பது எப்படி?

Almond Milk : ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பாதாம் பால் டீ, காஃபி தயாரிப்பது எப்படி?

பால் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், சாதாரண பால் குடித்தால் ஒவ்வாமை பிரச்னை வருபவர்கள், அதற்கு மாற்றாக சோயா பால், பாதாம் பால் ஆகியவற்றை குடிக்கலாம். இப்போது பாதாம் பால் பயன்படுத்தி காபி, டீ செய்வது எப்படி எனப் பார்க்கலாம். 

1 Min read
Author : Dinesh TG
Published : Sep 19 2022, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாதாம் பால்

இரவில் 15 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் பாதாம் பருப்பை தோல் உரித்துக் கொள்ள வேண்டும். பாதாமுடன் 200 மி.லி., தண்ணீர் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஆரோக்கியமான பாதாம் பால் தயார். அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

பாதாம் பால் டீ

ஒரு டம்ளர் டீ-க்கு முக்கால் பங்கு அளவு இந்த பாதாம் பாலை எடுத்து சுட வைத்து, அடுப்பை சிம்மில் வைக்கவும். கால் பங்கு அளவு தண்ணீரில் இரண்டு ஏலக்காயை தட்டிப் போட்டு, டீத்தூள் சேர்த்து டிகாசன் தயாரித்துக் கொள்ள வேண்டும். டிகாசன் தயாரானதும் பாதாம் பாலில் கலக்கி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து வடிகட்டினால் சுவையான பாதாம் பால் டீ ரெடி.

34

பாதாம் பால் காஃபி

ஒரு டம்ளரில் தேவையான அளவு காபிதூள் எடுத்துக்கொண்டு, சூடான தண்ணீரில் கலக்கவும். இதனுடன் சூடான பாதாம் பால், சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்தால் பாதாம் பால் காபி ரெடி.

44

பாதாமின் நன்மைகள்

வழக்கமான மாட்டுப் பாலை விட பாதாம் பாலில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது.

உடலில் உள்ள எல்.டி.எல்., என்ற கெட்டக் கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் இரத்தக்குழாயில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.

உடலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைப்பதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

இதில் குறைந்த அளவிலான கலோரிகள் மட்டுமே உள்ளதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ultra-Processed Foods: இதயத்தை மெல்ல கொல்லும் பாக்கெட் உணவுகள்! அதிரவைக்கும் மருத்துவ அறிக்கை! முழு விவரம்!
Recommended image2
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டும் 8 ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள்
Recommended image3
Hair Care Tips: இந்த 6 வைட்டமின்களை சாப்பிடுங்க, முடி கொட்டுறது சட்டுனு நிக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved