பிரிட்டனைச் சேர்ந்த 32 வயதான நிக்கோலா ஹோட்ஜஸ், தான் கோமாவில் இருந்தபோது இறந்துவிட்டதாகவும், அதன் பிறகு என்ன நடந்தது எனக்கூறியுள்ளார். அவர் சொர்க்கத்தில் இருந்து திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மரணமும், அதற்கு பிறகும் என்ன நடக்கிறது என்பது மனிதர்கள் பல நூற்றாண்டுகளாகக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு மர்மம். வெவ்வேறு மக்களும், மதங்களும் இது குறித்து வெவ்வேறான சொந்த கருத்துக்களை கூறி வருகின்றன. ஆனால், இதுவரை எதையும் நம்பமுடியவில்லை. சமீபத்தில் ஒரு பெண் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது குறித்து சொல்லி இருப்பது இப்போது படு வைரலாகி வருகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த 32 வயதான நிக்கோலா ஹோட்ஜஸ், தான் கோமாவில் இருந்தபோது இறந்துவிட்டதாகவும், அதன் பிறகு என்ன நடந்தது எனக்கூறியுள்ளார். அவர் சொர்க்கத்தில் இருந்து திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வலிப்பு மருந்தை மாற்றி உட்கொண்டாதால் நிக்கோலாவின் உடல்நிலை மோசமடைந்தது. திடீரென மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கென்ட்டின் ஆஷ்ஃபோர்டில் உள்ள வில்லியம் ஹார்வி மருத்துவமனையில் 24 மணி நேரம் டயாலிசிஸ் செய்யப்பட்டும் கோமா நிலைக்குச் சென்றார். அவர் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் 20% மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் கூறிவிட்டனர். கதறியழுத குடும்பத்தினர் நிக்கோலாவின் உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்கிற கலக்கத்தில் அவர் அருகிலேயே படுத்துக் கொண்டனர். காலையில் யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு அதிசயம் நடந்தது. நிக்கோலா உயிர் பிழைத்துக் கொண்டார். இது அவருடைய கடைசி இரவு என குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நிக்கோலா உயிர் பிழைத்ததில் இன்ப அதிர்ச்சியில் திளைத்துள்ளனர்.

அந்த இரவில் என்ன நடந்தது என்கிற அனுபவத்தை பகிர்ந்துள்ள நிக்கோலா, ‘‘மருத்துவ டாக்குமெண்டரி படங்களில் கேட்கப்படும் அதே பயங்கரமான வார்த்தைகளை என் குடும்பத்தினர் கேட்க வேண்டியிருந்தது. நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். நான் இரவைக் கழிப்பது கடினம் என்று டாக்டர்கள் தெளிவுபடுத்தி இருந்தனர். ஆனால் நான் உயிர் பிழைத்தேன். இது ஒரு அதிசயம் என டாக்டர்களே வியந்து போனார்கள்’’ என்கிறார் நிக்கோலா.

ஆனாலும், டாக்டர்கள் சொன்ன ஒரு விஷயம் உண்மையாகிவிட்டது. கோமாவின் போது, நிக்கோலா உயிர் பிழைத்தாலும், அவர் முன்பு போல் இருக்க மாட்டார் எனச் சொன்னதுதான் இப்போது நடந்துள்ளது. கோமாவிலிருந்து மீண்ட பிறகு, நிக்கோலா குழப்பம், மறதியால் அவஸ்தைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

நிக்கோலா மிகவும் புத்திசாலி, தன்னம்பிக்கை கொண்டவர் என்றாலும், அவருடைய இந்த நிலை காரணமாக, குழந்தைகளுடன் மட்டுமே அதிக நேரம் செலவிடுகிறார். வீட்டின் பெரியவர்களுடன் குறைவாகவே இருக்கிறார். ‘‘கோமா என்பது மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவம். நான் முழுவதும் இறந்துவிட்டேன். சொர்க்கத்திற்குச் சென்றேன். ஆனாலும், சொர்க்கம் நமக்குச் சொல்லப்படுவது போல் இல்லை. இங்கே ஒரு வகையான அரவணைப்பு இருந்தது. வானத்திலிருந்து ஒரு ஒளி வந்தது. இதை உணர்ந்த பிறகு, மரணத்திற்குப் பிறகும் ஏதோ இருக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். அது ஒரு சக்தியாக இருந்திருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒன்றாக இருண்நிருக்கலாம்’’ என்கிறார் நிக்கோலா