நம்மில் பெரும்பான்மையான மக்கள் ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபியுடன் தான் தங்களது நாளை தொடங்கவே விரும்புகின்றனர். இப்பழக்கம் பல வருடங்களாக, ஒரு சடங்காகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். இருப்பினும், இப்பழக்கம் நம் உடலுக்கு நல்லதை விடவும் அதிகளவில் தீங்கு விளைவிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

காலை வெறும் வயிற்றில் தேநீர்

ஊட்டச்சத்து நிபுணர் ரோகினி பாட்டீல் கூறுகையில், தேநீர் சிறந்த ஆறுதல் பானமாக இருக்கலாமே தவிர, அதனை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உங்கள் வயிற்றை தொந்தரவு செய்யக் கூடும். மேலும், வயிற்றில் உள்ள அமிலங்களைத் தூண்டி உங்கள் செரிமானத்தையும் சீர்குலைக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறார்.

சர்க்கரை நோயாளிகளே! சாதத்தை இப்படி சாப்பிட்டால் ரொம்ப நல்லதாம்!

காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால், உங்களின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலையும். மேலும், செரிமானப் பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் எனவும் நிபுணர் கூறியுள்ளார். இதனை ஒப்புக்கொண்ட ஊட்டச்சத்து நிபுணர் கரிஷ்மா ஷா, காஃபின் இயற்கையாகவே ஒரு டையூரிடிக் என்பதனால், நீரிழப்பை ஏற்படுத்தும் என விளக்கியுள்ளார். தேநீர் குடிப்பதற்கு முன்பாக, ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

அதிகாலையில் தண்ணீர் குடியுங்கள்

தேநீரின் PH மதிப்பு 4 மற்றும் காபியின் PH மதிப்பு 5ஆகும். இதன் காரணமாகவே அவை அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால், தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை அருந்துவதற்கு முன்பாக, அறை வெப்பநிலையில் உள்ள ஒரு டம்ளர் தண்ணீரை குடிப்பது அமில உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது என மருத்துவர் கரிமா கோயல் தெரிவித்துள்ளார். இல்லையென்றால், நீண்ட காலத்திற்கு இப்பழக்கம் தொடர்ந்தால், நெஞ்சரிச்சல் மற்றும் அல்சர் போன்ற நிலைகளுக்கு ஆளாகும் ஆபத்து நிச்சயம் உருவாகும் எனவும் எச்சரிக்கிறார்.

Mango: பச்சை மாங்காயில் கொட்டிக் கிடக்கிறது ஆரோக்கிய நன்மைகள்!

ஊட்டச்சத்து நிபுணரான ருச்சிகா ஜெயின், இதனை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இரவு நேரத்திற்குப் பின் உடல் நீரிழப்புடன் இருப்பதனால், காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது தான் மிக முக்கியம். அதிகாலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்து, நமது உடலை நீரேற்றம் செய்வதன் மூலமாக நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை மற்றும் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும். மேலும் தண்ணீர் குடிப்பதால், “குடலை சுத்தம் செய்வதன் மூலமும், குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலமும்” மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் இது உதவுகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.