Mango: பச்சை மாங்காயில் கொட்டிக் கிடக்கிறது ஆரோக்கிய நன்மைகள்!
மாங்காயைக் கண்டால் மட்டுமல்ல நினைத்தாலே போதும், அனைவரது நாவிலும் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு மாங்காயின் சுவை அனைவரையும் தன்வசம் இழுக்கிறது. அதிலும், மாங்காயில் உப்பு மற்றும் மிளகாய்த் தூள் தொட்டு சாப்பிட்டால் அதன் சுவையோ பலமடங்கு கூடும். உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
mango
மாங்காய் சாப்பிடுவதன் பலன்கள்
கோடைகாலத்தில் அதிக அளவிலான வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்தை இழக்கிறோம். இதனால் சிலருக்கு உடல் வெப்பமடைந்து, லேசான காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும் அளவுக்கு ஆபத்துக்கள் ஏற்படும். ஆனால், மாங்காயை சாப்பிட்டு வருவதன் மூலமாக, அதில் இருக்கும் சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை சீராக பராமரிக்கிறது. இதனால், அதிக வெப்பத்தால் ஏற்படும் இப்பிரச்சனையை மாங்காய் தடுக்கிறது.
மாங்காயில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. இது நம் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி புரிகிறது. இதனால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டோடு வைத்து, இதய நோய் வருவதன் அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
mango
பச்சை மாங்காய்
ஒருவேளை நீங்கள் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், மாங்காயை பச்சையாக சாப்பிடுங்கள். பச்சை மாங்காய், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. ஏனெனில், மாங்காய் பித்த நீரின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், குடலை பாக்டீரியா தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
Mango
பச்சை மாங்காயில் ஆவியாக கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. இது, செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டுகிறது. மேலும், செரிமானப் பிரச்சனைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
mango
பருவநிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுகளால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராக இருந்தால், அடிக்கடி பச்சை மாங்காயை சாப்பிட்டு வாருங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது.