வீட்டு சமையல் அறையில் இருக்கும் மஞ்சள் தூளை வைத்து சூப்பரான முறையில், அதுவும் வேகமாக உடல் எடையை குறைக்க முடியும். தினமும் உணவில் மஞ்சள் தூள் சேர்க்கிறோம் என்றாலும் இதை குறிப்பிட்ட சில முறைகளில் பயன்படுத்தினால் வேகமாக உடல் எடை குறைவதை காண முடியும்.

வீட்டு சமையல் அறையில் இருக்கும் மிக முக்கியமான பொருளான மஞ்சளை சரியான முறையில் பயன்படுத்தினால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பல ஆரோக்கிய நன்மைகளை தரும் மஞ்சளை எந்தெந்த முறைகளில் பயன்படுத்தினால் வேகமாக உடல் எடை குறைந்து ஸ்லிம்மாகலாம் என வாங்க தெரிந்து கொள்ளலாம். 

மஞ்சளில் பயோகெமிக்கல் சேர்மங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக குர்குமின் அதிகம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை அதிக கொண்டுள்ளது. இது உடல் எடையை வேகமாக குறைய வைக்கவும் பயன்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. மஞ்சள் எப்படி உடல் எடையை குறைக்கும் என யோசிக்கறீர்களா? மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் திசுக்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இத வளர்சிதை மாற்றத்தையம் தூண்டக் கூடியதாகும். அது மட்டுமல்ல சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறன் இதில் இயற்கையாகவே உள்ளது. 

உடல் எடையை குறைக்க மஞ்சளை பயன்படுத்தும் முறைகள் :

மஞ்சள் டீ :

மஞ்சள் டீ, மஞ்சளை பயன்படுத்தி மிக எளிமையாக உடல் எடையை குறைப்பதற்கான எளிய வழியாகும். அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி குடிக்கவும். இந்த டீயை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் உடல் எடை நன்கு குறைவதை காண முடியும். இது வயிற்று எரிச்சலையும் குறைக்கும்.

மஞ்சள் தண்ணீர் :

மஞ்சள் தண்ணீர் புத்துணர்ச்சி தரும் ஒரு ஆரோக்கிய பானமாகும். அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூளை, ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்வதுடன், பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. அதோடு உடல் எடை குறைய உதவுகிறது. இத அனைத்து காலங்களுக்கும் ஏற்ற பானமாகும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும்.

மஞ்சள் பால் :

மஞ்சள் பால் மிக சிறந்த உணவாகும். அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூளை வெது வெதுப்பான பாலில் கலந்து, அதோடு சிறிதளவு மிளகு தூள் சேர்த்து குடித்து வரலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளித் தொல்லை உள்ளவர்கள் இதை தொடர்ந்து குடித்து வரலாம். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் இதை குடித்து விட்டு படுத்தால் உடல் எடை குறையும். மனமும், உடலும் ரிலாக்சாக இருப்பதை உணர்வீர்கள்.

மஞ்சள் இலங்கப்பட்டை பானம் :

இது புத்துணர்ச்சி ஊட்டும் பானமாகும். இதில் பல நன்மைகளும் அடங்கி உள்ளது. ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் டீ ஸ்பூன் இலவங்கப் பட்டை தூள் கலந்து குடிக்க வேண்டும். இது வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். அதிகமாக உள்ள உடல் எடையை குறைக்க தினமும் காலையில் இதை குடித்து வருவது நல்லது. பொதுவாகவே உடல் எடையை குறைப்பதற்கு இலவங்கப் பட்டை மிகச் சிறந்த பொருளாகும்.