செண்பக  மரம் பற்றி நமக்கு  கண்டிப்பாக  தெரிந்திருக்கும். இந்த மரம் மேற்கு  தொடர்ச்சி   மலைப்பகுதியில்  தானாகவே  வளரக்கூடியது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இந்த மரத்தை பார்க்க முடியும். குறிப்பாக  கோவில்கள் மற்றும்  அழகுக்காக ஒரு  சில  வீடுகளில் கூட  இந்த மரத்தை  வளர்ப்பது  உண்டு.

செண்பக  மரத்தின்  இலைகள்  நன்கு  நீண்டு மேல்நோக்கி  வளரக்கூடியவை.. இலைகள்  பசுமையாக  இருக்கும். இந்த  மரத்தில்  கிடைக்கும் செண்பகப்பூ- வின்  மனம்  காற்றோடு  கலந்து  சுற்றுப்புறத்தை நன்கு தூய்மையாக  வைத்துக்   கொள்ளும்

செண்பகப்பூக்கள்

இந்த  மரத்தின் மூலமாக  கிடைக்கக்கூடிய இலை, பூ, விதை, வேர். பட்டை  என  அனைத்தும்  மருத்துவ  குணம்  கொண்டது.

இலைகள்  தண்ணீரில் போட்டு குடித்து  வருதல் - வயிற்றுக்கோளாறு  நீங்கும்

தூக்கமின்மை மற்றும் மன உளைச்சலுக்கு  எளிய  மருந்துகளை  இந்த  மலர் கொண்டு தயாரிக்கலாம்

உயர் ரத்த அழுத்தம் குறையும்

இரண்டு செண்பக இலைகளை கொண்டு , அத்துடன் சிறிதளவு  கசகசா , அரை டீஸ்பூன் பனங்கற்கண்டு போன்றவற்றை சேர்த்துஅரைத்து,சிறிதளவு  தண்ணீர்  சேர்த்து கொதிக்க  வைக்க  வேண்டும்.  பின்னர் அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து வடிக்கட்டி  குடித்து வந்தால்,  உயர் ரத்த அழுத்தம்  குறைந்து  சீராக  இருக்கும். வயிற்றுப்புண்ணும் சரியாகும். ஆண்மை குறைவு நீங்கும்.