Novel Fruit: இந்த ஒரு பழம் போதும் உங்களின் சிறுநீரகத்தைப் பாதுகாக்க!
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் நாவல்பழத்தின் மகிமைகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
நமது உடல் ஆரோக்கியம் காப்பதில் பழங்களுக்கு என்றுமே தனித்துவமான இடமுண்டு. பழங்கள் பலவும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கின்றது. தினசரி பழங்களை சாப்பிடும் பழக்கம் இருந்தாலே, அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக அமையும். ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான நன்மையைச் செய்கிறது. அதில், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் நாவல்பழத்தின் மகிமைகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
நீரிழிவு நோய்க்கு நாவல் பழம்
நீரிழிவு நோய்க்கான மிகச் சிறந்த சிகிச்சையளிக்கும் உணவாக நாவல் பழம் உள்ளது. இப்பழத்தின் விதைகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
சிறுநீரகத்தை பாதுகாக்கிறது
நாவல் மரத்தினுடைய மரப்பட்டை, நுரையீரல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அரைத் தேக்கரண்டி நாவல்பழ மரப்பட்டைத் தூள் மற்றும் ஒரு கரண்டி பழச்சாறு சேர்த்து, தினசரி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்த்தொற்றுகளையும் மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பதையும் தடுக்க முடியும்.
புற்றுநோயைத் தடுக்கிறது
நாவல் பழம் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைகிறது. நாவல் பழத்தில் பாலிபினால்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி முற்றிலுமாக அழிக்கிறது.
பற்கள் வலிமை பெறும்
நாவல் பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. இந்தப் பழத்தின் சாறு, வாய் துர்நாற்றம் நீங்குவதற்கு உதவி புரிகிறது. நாவல் பழ மரத்தினுடைய பட்டையை எரித்து, சாம்பலாக்கி பற்களை துலக்கினால், பற்கள் அனைத்தும் பல மடங்கு வலிமை பெறும்.
கொழுப்பை கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவும் "கொள்ளு குருமா"!
சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை சாப்பிட்டு, அதனுடைய விதைகளை உலர வைத்து பொடி செய்து, தயிரோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.
இயற்கையிலேயே நாவல் பழம், உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கப் பயன்படுகிறது. மேலும், இப்பழம் இரத்த ஓட்டத்தையும் நிலையாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. நாவல் பழம் நமது கண்களுக்கும் நல்ல பலனை அளிக்கிறது. அதோடு, நம் கண்களின் பார்வையைத் தெளிவாக்குகிறது.