Almonds: ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பை சாப்பிட தகுந்த நேரம் இது தான்!
முக்கியமாக உடல் எடையை குறைக்க பாதாம் பருப்பு உதவுகிறது. பாதாம் உடல் எடையை குறைக்க எப்படி உதவுகிறது மற்றும் எப்படி எடுத்துக் கொள்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதால் தான் உடல் எடை கூடுகிறது. அதோடு, பல விதமான நோய்களும் எளிதில் தொற்றிக் கொள்கிறது. ஆனால், அதுவே நல்ல கொழுப்புகள் உடலில் சேர்ந்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவ்வகையில், பாதாம் பருப்பில் நம் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்திருக்கிறது. இதனை தினந்தோறும் எடுத்துக் கொள்வது பல வகையான ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு அள்ளிக் கொடுக்கும். இதையெல்லாம் விட மிக முக்கியமாக உடல் எடையை குறைக்க பாதாம் பருப்பு உதவுகிறது. பாதாம் உடல் எடையை குறைக்க எப்படி உதவுகிறது மற்றும் எப்படி எடுத்துக் கொள்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைக்கும் பாதாம்
தினந்தோறும் உணவில் பாதாமை சேர்த்துக் கொள்ளும் போது, மிகவும் குறைந்த கலோரியில் அதிகளவில் ஊட்டச் சத்துக்களும், பசியை கட்டுப்படுத்தும் நார்ச் சத்துக்களும் அதிகமாக கிடைக்கிறது. ஆகையால், ஏற்கனவே உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகள், ஆற்றலாக மாற்றப்பட்டு கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக மிக வேகமாக எடையை குறைக்க முடியும். பாதாம் பருப்பை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.
தினந்தோறும் 20 முதல் 25 பாதாம் வரையில் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம். இரவு முழுவதும் பாதாமை ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் சாப்பிடலாம். இது தேவையான ஆற்றலைத் தர வல்லது. உடல் எடையும் ஆரோக்கியமான முறையில் குறையும்.
பாதாம் பருப்பை பொடி செய்து, தினந்தோறும் ஓட்ஸ் போன்ற கஞ்சிகள் அல்லது நீங்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் தோசை, இட்லி மற்றும் ரொட்டி ஆகியவற்றை செய்யும் போது, அந்த மாவுடன் பாதாம் பொடியையும் சேர்த்து கலந்து பயன்படுத்தி கொள்ளலாம். பாதாம் பருப்பை ஊற வைத்து, பிறகு அரைத்து பால் எடுக்க வேண்டும். இதனை அப்படியே குடிக்கவோ அல்லது ஸ்மூத்திகள் செய்யும் போதும் பயன்படுத்தி கொள்ளலாம்.
பாதாம் சாப்பிட தகுந்த நேரம்
முதல் நாள் இரவு அன்று 10 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து, நடுவில் லேசாக பசியெடுக்கும். அந்த நேரத்தில் பாதம் சாப்பிடுவதே மிகவும் சரியான நேரம் ஆகும்.