Asianet News TamilAsianet News Tamil

Scutch grass juice: மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம்புல் சாறு: தொடர்ந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா!

அருகம்புல் சாற்றை தினந்தோறும் குடித்து வந்தால், உடலில் உண்டாகும் பல நோய்களை மிக எளிதாக விரட்ட முடியும்.

Medicinal Scutch grass juice: So many benefits if you drink it regularly!
Author
First Published Dec 1, 2022, 4:14 PM IST

மனிதன் ஆரோக்கியமாக வாழ, இயற்கை பல வரப்பிரசாதங்களை நமக்கு அளித்துள்ளது. அவற்றை நாம் சரியாக பயன்படுத்தி கொண்டாலே போதும். நோய்நொடி ஏதுமின்றி நலமோடு வாழலாம். அவ்வகையில் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த வரப்பிரசாதம் அருகம்புல். பல விதமான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. ஆனால், அருகம்புல் பற்றிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. பல ஆரோக்கிய உணவுகள் நம்மைச் சுற்றியே இருந்தாலும், அதெல்லாம் இன்றைய தலைமுறையினர் கண்களுக்குத் தெரிவதில்லை. அருகம்புல் சாற்றை தினந்தோறும் குடித்து வந்தால், உடலில் உண்டாகும் பல நோய்களை மிக எளிதாக விரட்ட முடியும்.

அருகம்புல் சாறு

கிராமங்களில் வயல்வெளிகள் மற்றும் பசுமை நிறைந்த இடங்களில் அருகம்புல் மிக எளிதாக கிடைக்கிறது. இதனைப் பறித்து தண்ணரில் நன்றாக அலசி, சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீரை சேர்த்து நன்றாக இடித்து சாறு எடுத்து குடிக்கலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி மற்றும் வில்வம் ஆகிய இரண்டையும் சேர்த்து கொள்ளலாம். 

அருகம்புல் சாற்றினை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலையில் குடிக்க முடியாதவர்கள் மாலையில் 200 மிலி அளவுக்கு குடிக்கலாம். இப்போது அருகம்புல் சாற்றினை குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

அருகம்புல் சாற்றின் நன்மைகள்

அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இதை குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். குழந்தைகளுக்கு அருகம்புல் சாற்றை பாலில் கலந்தும் கொடுக்கலாம்.

உடலின் இரத்த சுத்திகரிப்பிற்கு அருகம்புல் சாறு மிகப்பெரும் உதவியாக அமைமகிறது. இரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இரத்தச் சோகை மற்றும் இரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

Drinking tea: தேநீர் குடித்ததும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்!

  •  அருகம்புல் சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இந்த சாறு தணிக்கிறது. 
  • நரம்புத் தளர்ச்சி மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.
  • பொதுவாக நீங்கள் அலாபதி மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும், அருகம்புல் சாற்றைப் பருக எந்தவித தடையும் இல்லை. அருகம்புல் சாறு குடிப்பதால், பல நன்மைகள் கிடைக்குமே தவிர எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது.
Follow Us:
Download App:
  • android
  • ios